உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா?

அன்புள்ள விவசாய சொந்தங்களே
நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு என்ற குழுவின் மூலம் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் அட்டவணைகளில் இடு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பது மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை அளவு அதிகமாக இருப்பது
விவசாயிக்கு அதிக வேலையை தருகிறது மற்றும் செலவு அதிகமாகிறது என்ற கோணத்தில் பலர் பல தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம்
மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது.
உண்மையில் விவசாயத்தில் அதிக லாபம் பெற வேண்டுமென்றால் மண்ணின் வளத்திற்கு ஏற்ப சரியான இடுபொருட்களை நிலத்தில் கொடுத்தால் மட்டுமே அதிக விளைச்சல் கிடைக்கும் அதிக விளைச்சல் கிடைத்தால்தான் அனைத்து செலவுகளையும் சரிசெய்ய இயலும். குறைவான விளைச்சலையும் அதிகமான செலவுகளையும் வைத்துக்கொண்டு இருந்தால் இது மாதிரியான வாசகங்கள் மட்டுமே நமக்கு ஞாபகத்திற்கு வரும்.
நமது மண்ணில் அடியுரம் இடுவது தவறான காரியமல்ல மண்ணில் மற்ற பொருள்களை அதிகப்படுத்தி அனைத்து பயிர்களும் அதிக நுண்ணுயிரிகளுக்கு உணவளித்து தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அடி உரம் தேவை.
பயிரின் பல்வேறு நிலைகளில் பயிருக்கு தேவையான உணவுகளை கொடுப்பது தவறான செயல் அல்ல. பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் உணவு கொடுப்பதும் பல்வேறு கால நிலைகளில் பயிரைத் தாக்கும் பூச்சிகள் ஏற்ப பூச்சிவிரட்டிகள் அடிப்பதும் பெயரை கெடுக்கும் செயல் அல்ல.
விவசாயத்தை ஏனோதானோ என்று அலட்சியமாக செய்வதை விடுத்து நீண்டநாள் விவசாயம் இருக்க வேண்டும் என்பதற்காக அது ஒரு லாபகரமான செயல்பாடு என்பதை நிரூபிக்கும் வகையில் மண்ணின் தேவைக்கேற்ப உணவளித்து விவசாயத்தை பெருக்க செய்வது நமது கடமை.
இந்தக் குழுவில் தெரிவிக்கப்படும் பயிருக்கான இடுபொருள்கள் மற்றும் பாதுகாப்பு பொருள் கொடுப்பது சரியா தவறா என்பதை நீங்களே முடிவெடுத்து உங்களுக்கு விருப்பம் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்.