எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை

Agriwiki.in- Learn Share Collaborate

எலுமிச்சைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :

1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.

2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.

7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.

9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.

16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.

20 வது நாள் : ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் எருக்கு கரைசல் 250 கிராம் சாம்பல் தரைவழி தரலாம்.

23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.

25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml வீதம் தரைவழி தரவும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும்.

பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.