ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்

ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
பசுமை வணக்கம்

ஏரிகளின் சிறப்பு- 3

ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்..

* வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது.

* தூர் எடுத்து கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.

* பயன்படுத்தாத நீர் அளவை 20% வரை அதிகரிக்கலாம்

* தூர் வாரிய மண்ணை கரைகளை பலப்படுத்தவும், சாலைப்பணிகளுக்கும் பயன்படுத்தலாம். வண்டல் மண்ணை உழவர்களுக்கு தரலாம்.அதற்கும் மிகுதியாக உள்ள மண்ணை தீவுகளாக உருவாக்கி அதில் மரக்கன்றுகள் நட்டு பல்லுயிர்தன்மையை அதிகரிக்கலாம்.
தீவுகள் என்னென்ன விட்டத்தில் உருவாக்கலாம் எனும் (Modelling) அட்டவணையை நான் உருவாக்கியுள்ளேன்.

* கழிவு நீர் ஏரியில் கலந்தால் அதை சுத்திகரித்து ஏரிக்குள் விடவேண்டும்.
இதற்கும் கலக்கும் இடத்திலே சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன்.

* ஏரிகளை சீரமைத்தப்பின் பயனீட்டாளர்கள் அமைப்பை பலப்படுத்தி அவர்கள் பராமரிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இதைதான் சர்வதேச ஏரிகள் படுகை மேலாண்மை திட்டத்தில் மிகத் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

2007ம் வருடம் ஏரிகள் மாநாடு ஜெயப்பூரில் நடந்ததில் கலந்துக்கொண்டேன். அதில் உலகம் முழுவதுமுள்ள ஏரிகள் சீரமைப்புப்பணிகளின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் என்னுடைய முனைவர் ஆய்வினை முடித்தேன்..
இன்று இந்திய அளவில் எப்படிப்பட்ட மாசடைந்த ஏரிகளையும் சீரமைக்கமுடியும். நம்ஊரிலேயே தொழில் நுட்பங்கள் உள்ளன.
( ஆக்ரமிப்புகளை அரசு அகற்றிவிட்டால்)
இந்திய அளவில் நாம் முன்னோடியாக இருக்கிறோம்..

ஏரிகள் தமிழகத்தின் வரப்பிரசாதம்.
அரசும் பொது மக்களும் தொழில் முனைவோரும் இணைந்து நான் குறிப்பிட்டதுபோல ஏரிகளை சீரமைத்தால் குறைந்த செலவில் திட்டங்களை முடிக்கலாம்…

மழைநீர் வெள்ள நீராக மாறும்போது 10000 ஏரிகளில் தேக்கினால் சர்வ சாதரணமாக 30 டி எம் சி நீரை கூடுதலாக தேக்கலாம்..

முயற்சி திருவினையாக்கும்..

நம்பிக்கையுடன்

முனைவர் இரா. இளங்கோவன்
நிலைத்த வளர்ச்சிக்கான பொறியாளர்.

Ilangovan Rajan