கடுகுப் பயணம்

கடுகுப் பயணம் – மண்டலப் பொறுப்பாளர் அறிவிப்பு
– ம.செந்தமிழன்

நண்பர்களே,
கடுகுப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள். அனைவரையும் முறைப்படி ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்த ஏதுவாக மண்டலவாரி பொறுப்பாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் நேரிடையாக என்னுடன் பணித் தொடர்பில் இருப்பவர்கள். அதேவேளை பயணத்தின் களப் பணியாளர்களையும் வெளியிலிருந்து ஒத்துழைப்புகள், பங்களிப்புகள் நல்குவோரையும் ஒருங்கிணைப்பார்கள்.

பட்டியலில் உள்ள ஊர்களில் உங்களுக்கு வாய்ப்பான பகுதி அடிப்படையில் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

இவர்களைத் தவிர, தமிழகமெங்கும் களப் பொறுப்பாளர்கள் பணியில் இணைக்கப்படுகிறார்கள். அனைவரது பெயர்ப் பட்டியலையும் இணைப்பது தேவையற்றது என்பதால் இம்முறை தவிர்க்கிறேன்.

பயணத்தின் ஊடாக அவர்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

அன்புடன்,
ம.செந்தமிழன்