கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது?
வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்!
கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன… விற்கப்படுகின்றன!!
1 கன அடி என்பது 1 அடி நீளம்,1 அடி அகலம் மற்றும் 1 அடி உயரம் அளவு கொண்ட கன சதுரம் ஆகும்.
1அடி என்பது 12 இஞ்ச்…எனவே ஒரு கன அடி என்பதை 12 இஞ்ச்x12 இஞ்ச்x12 இஞ்ச் என்றும் கணக்கிடலாம்…
இப்போது இது மூன்றையும் பெருக்கினால் 1728 கன இஞ்ச் வரும்…
அதாவது 1 கன அடி=1728 கன இஞ்ச்…
மரச்சட்டத்தின் அளவு:
இப்போது மெயின் கதவுக்கு நான்கு புறமும் மர சட்டம் தேவை.
இந்த சட்டத்தின் அளவு 5″x4″ என்று வைத்துக்கொண்டால் ..
ஒரு கதவு அளவு 3 அடி x 7 அடி என்று வைத்துக்கொண்டால்…மொத்த மர சட்டத்தின் நீளம் 20 அடி…
இப்போது 20 அடி நீளம் (240 இஞ்ச்), 5 இஞ்ச் அகலம் மற்றும் 4 இஞ்ச் உயரம் என மூன்றையும் பெருக்கினால் 4800 கன இஞ்ச் வரும்…
இதை 1728 ஆல் வகுத்தால் (4800÷1728) என்ன வருகிறதோ அதுவே கன அடி அளவாகும்…
2.77 கன அடி மரம் நமக்கு இந்த கதவு நிலைக்கு தேவை!
பலகைகளின் அளவு :
அதேபோல் பலகைகளும் கன அடி அளவு மற்றும் சதுர அடி அளவில் தரப்படுகிறது!
இப்படி இஞ்சில் கணக்கு பண்ணாமல் நேரிடையாக அடியிலேயே கணக்கிடுவதென்றால்…
20 அடி x 0.42 அடி(5″) x 0.33 அடி என்று பெருக்கியும் கன அடியை கணக்கிடலாம்…எப்படி போட்டாலும் ஒரே அளவுதான் வரும்…
5″ அளவை எப்படி அடியில் 0.42 என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?
ஒரு இஞ்ச் அளவை 12 ஆல் வகுத்தால் இந்த அளவு வரும்(5÷12)….4÷12 என்றால் 0.33 வரும்!
இப்ப 20′ x 5″ x 4″ என்பதை நேரிடையாக அடியில் பெருக்க 20 x 0.42 x 0.33 என்று பெருக்க வேண்டும்! 2.77 கன அடி ரிசல்ட் வரும்!
நன்றி
ஹரி