கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க வந்தவாசி திரு.சீனீவாசன் அவர்களின் எளிய முறை:
ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சுமார் 5கிலோ பட்டையை 5-10லிட் தண்ணீரீல் ஊற வைக்கலாம். 48 மணி நேரம் ஊற அடர் சிவப்பு நிறம் கொண்ட திரவம் கிடைக்கும். அதனை 15லிட் அளவுள்ள டிரம்மிற்கு 1லிட் விதம் கலந்து நன்கு நனையுமாறு 20நாட்கள் வரை நாட்களுடைய இளம் செடிகள் மேல் தெளிக்கலாம்.
அதற்கு மேல் அதன் அளவை15லிட் டிரம்மிற்கு 3லிட் வரை கூட்டலாம். இது போல் 20-25நாட்களுக்கொருமுறை தெளிக்கலாம்.
இதனால் காய்புழு,தண்டுப்புழு மறைந்து அதிக பளபளப்பான விளைச்சல் கிடைக்கும்.