கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்

 

கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர்.

நீண்ட ஆயுள், நீடித்த உறுதி, பாதுகாப்பு, சுற்றுச் சூழல் கேடின்மை, இதமான குளிர்ச்சி எனக் கருங்கல் கட்டிடங்கள் தரும் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய காலகட்டத்தில் இத்தகையை சிறப்பு வாய்ந்த கருங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, அதில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதில் கைகூடும் விஷயமல்ல.

உடுமலை அருகே, பழமையில் நாட்டம்கொண்ட விவசாயி ஒருவர் 17-ம் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் கருங்கற்களைக் கொண்டே ஓர் அழகிய வீட்டைக் கட்டியுள்ளார். அவரது நிலத்தில் கிடைத்த கற்களையே கட்டுமானக் கற்களாகக் கொண்டு இந்த வீட்டை உருவாக்கியுள்ளார்.

இயற்கைக் கட்டிடக் கலைஞரான லாரி பேக்கர் உருவாக்கியது போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடாக இது உருவாகியுள்ளது.

பொதுவாக இன்றைக்கு நாம் கட்டும் வீட்டுக்கான செங்கல், மணல் போன்ற கட்டுமானப் பொருள்களை வெகு தொலைவிலிருந்து தருவிப்போம். இதனால் பணம் விரையமாவதோடு செங்கல் தயாரிப்புக்காகச் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். மணல் அள்ளுவதலாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அவ்வாறு இல்லாது அந்தப் பகுதியில் கிடைக்கும் கருங்கற்களைக் கொண்டு விவசாயி ஜோசப் பாப்லே இந்த வீட்டை உருவாக்கியுள்ளார்.

உடுமலையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தீபாலபட்டி என்னும் கிராமத்தில் உள்ள இந்த வீடு இப்போது காண்பவர்களை வசீகரித்து வருகிறது.

“நாங்கள் வசிக்கும் பகுதி வண்டல் மண் பகுதியாக உள்ளது. அதனால், நிலமட்டத்தில் இருந்து பூமிக்கடியில் சுமார் 20 அடி ஆழம் வரை தோண்டி அஸ்திவாரத்தில் இருந்தே, கருங்கற்களால் பலமான சுவர் எழுப்பி, முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டது.

மொத்த கட்டுமானத்துக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது. அவை முழுவதும் எங்கள் தோட்டத்தில் கிணறு வெட்டும்போது கிடைத்த கற்கள்தான்” எனத் தான் வீடு கட்டிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜோசப் பாப்லே.

கருங்கற்களால் ஆன இந்த வீடு கோடைக் காலத்திலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியது. அதேபோல மழைக் காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் ஏற்றது.

“இந்தக் கருங்கற்களால் ஆன வீடு கட்ட வேண்டும் என்பது என் கனவு. அது நனவாகி, அதில் குடும்பதுடன் வசிப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனச் சொல்கிறார் ஜோசப் பாப்லே.

புகைபடத்தில் வட்டமிடப்பட்ட பகுதியில் ஒரு விஷயம் உள்ளது யாராவது கவனித்திர்களா??

நன்றி
ஹரி