காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

Agriwiki.in- Learn Share Collaborate

காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு

 

1. அடி உரமாக 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு இடுவது நல்லது

2. முடிந்தவரை ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி ஆழத்திற்காவது இரண்டு அல்லது மூன்று முறை உழவோட்டி மண்ணை புரட்டிப் போடுவது நல்லது.

3. உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஒரு லிட்டர் பாசிலோ மைசீஸ் ஒரு லிட்டர் மெட்டாரைசியா போன்ற உயிர்வழி திரவங்களை கலந்து தரைவழி அனைத்து பயிர்களின் வேர்கள் வேர்ப்பகுதியில் படுமாறு பாசனத்தின் வழியாக கொடுக்கலாம்.

4. வயலின் அனைத்து வரப்புகளிலும் 5 அடிக்கு ஒரு ஆமணக்கு விதைகளை நட்டு வைப்பது மற்றும் அந்த இரண்டு ஆமணக்கு விதைகளின் இடையே 10 சென்டி மீட்டருக்கு ஒரு தட்டைப்பயிறு நடவு செய்வது நல்லது.

5. கைவசம் இயற்கை வழி பாதுகாப்பு திரவங்களான வேப்ப எண்ணெய் கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், ஐந்திலை கசாயம், பத்திலை கஷாயம், அக்னி அஸ்திரம், வெள்ளை வேல மரப்பட்டை கரைசல், கற்பூர கரைசல், கருவேல மரப்பட்டை கரைசல் போன்ற கரைசல்களில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை குறைந்தபட்சம் 30 லிட்டர் இருக்குமாறு முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

6. அல்லது உயிர் வழி திரவங்களான வெர்டி சீலியம் லக்கானி 3 லிட்டர் புழுக்களுக்கான திரவமான பேஸிலஸ் துருஞ்ஜிஎன்சீஸ் 3 லிட்டர், வண்டு மற்றும் பெரிய புழுக்களுக்கு எதிரான மெட்டாரைசியம் 1 லிட்டர் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும்.

7. மாதம் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் ட்ரைக்கோ டெர்மா விரிடி என்ற பூஞ்சை கொல்லி திரவத்தை 200 லிட் தண்ணீரில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் வேரில் படுமாறு ஊற்றி விடலாம். 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம்.

8. செம்மண் நிலமாக இருந்தால் சுண்ணாம்புத்தூள் ஆறு கிலோ வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

9. எருக்கு இலை கிடைக்கும் இடத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ளலாம்.

10. சூரிய ஒளியில் இயங்கும் விளக்கு பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்ணிக்கை பல இயக்கங்களுக்கான பொறி 8 முதல் 10 எண்ணிக்கை கருவாட்டு பொறி 8 முதல் 10 எண்ணிக்கை மற்றும் ஒட்டுண்ணி அட்டைகள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

11. இயற்கை இடு பொருள்களான மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 30 லிட்டர், ஈ எம் கரைசல் 20 லிட்டர், பஞ்சகாவியா 20 லிட்டர், க்யூமிக் அமிலம் 2 லிட்டர் வைத்துக் கொள்வது நல்லது.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.