கொடி ஆடுகள் நாட்டு ஆடுகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
கொடி ஆடுகள் (நாட்டு ஆடுகள்)

 

மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்.இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு.

நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும்.

ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும்.

வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும்.

100செ.மீ உயரம்
85செ.மீ நீளமிருக்கும் கிடாக்களின் எடை40கிலோ இருந்து75 கிலோ வரை இருக்கும்

பெண் ஆடுகள் 80செமீ உயரம், 70செமீ நீளம் இருக்கும்
சராசரி எடை 35கிலோ இருக்கும்

இந்த வகை ஆடுகள் தென் மாவட்டங்களில் காணப்படும்.குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும்.

உயரமான கால்களை கொண்டிருப்பதால் நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லலாம். உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும்.

இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன.

பிறந்த கிடா குட்டிகள் : 1.5-2.1 கிலோ எடை
பெட்டை குட்டிகள் : 1.5-2.05 கிலோ எடை
மாதாந்திர எடை வளர்ச்சி : 2-2.5 கிலோ எடை
கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும்
வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும்

* அதிக அளவில் 2 குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. அரிதாக முன்று குட்டிகள் ஈனும்
* மிகவும் குறைவான இறப்பு விகிதம்
* கொட்டில் முறையில் ஆடு வளர்ப்புக்கு எற்றது
* வெப்ப காலநிலைகு எற்றது