கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

Agriwiki.in- Learn Share Collaborate

கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

by செபாஸ்டியன் பிரிட்டோராஜ்

கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள். அனைத்து வகை கொய்யா வைத்திருக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு.

பழ ஈ தாக்கத்திற்கு

1) பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம்.

நோய் மற்றும் பூச்சி தாக்கங்களை குறைக்க


2) பூ வைத்த காலத்திலிருந்து ஒவ்வொரு 12 நாளுக்கொருமுறை வேப்பெண்ணெய் கரைசல் அல்லது ஐந்து இலை கசாயம் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இதனால் காய்களில் வரும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சி தாக்கங்களை குறைக்கலாம்.

3) 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி சூடோமோனஸ் 25 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து இலையின் முன்னும் பின்னும் படுமாறு தெளிக்கலாம், அதே நாளில் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தேவையான தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

அடர்நடவு தீவிர அடர்நடவு வைத்திருப்போர் இருநூறு மரங்களை ஒரு ஏக்கர் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.அதற்கேற்றார்போல் இடுபொருட்களையும் பாதுகாப்பு முறைகளையும் கலந்து தருவது நல்லது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

4) அளவான தண்ணீரை பாசனமாக காலை 9 மணிக்கு முன்போ அல்லது மாலை 5 மணிக்குப் பின்பு சேர்த்துக் கொடுக்கலாம் உதாரணமாக 10 லிட்டர் தினசரி கொடுக்க வேண்டிய தண்ணீரை காலை 5 லிட்டர் மாலை 5 லிட்டர் என பிரித்துக் கொடுக்க வேண்டும். அந்த பாசன நீருடன் பஞ்சகாவியா ,இஎம் கரைசல், மீன் அமிலம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை ஏதாவது ஒன்றை கலந்து தரைவழி தரவேண்டும்.

5) தரையில் விழுந்து கிடக்கும் பாதிக்கப்பட்ட பூச்சித் தாக்கம் அல்லது நோய்த்தாக்கம் அடைந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும். தரையில் விழுந்து கிடக்கும் அழுகிய பழங்கள் நோய்வாய்ப்பட்ட பழங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காய்ந்த இலைகளை வட்டப் பாத்தி முழுவதும் பரப்பிவிட்டு அல்லது நான்கு மரங்களுக்கு நடுவே உள்ள வெயில்படும் பகுதிகளில் பரப்பிவிட்டு மூடாக்காக அமைக்கலாம்.

ஊடு பயிர் மூலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கலாம்

6) அடர்நடவு இல்லாத வகையில் நடப்பட்ட கொய்யா மரங்களில் இடையில் ஊடுபயிராக பயறு வகை பயிர்கள் கொடிவகை பயிர்களான பழம் போன்ற மூலம் பூசணி வெள்ளை பூசணி மஞ்சள் பூசணி போன்ற ஒரு வருடத்திற்கு 4 விதைகள் வீதம் நட்டு வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.


நூற்புழு தாக்கத்தில் இருந்து பாதுகாக்க

7) ஒவ்வொரு மரத்தின் வட்டப்பாத்திகளிளும் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு செவ்வந்தி பூ கன்றுகளை நட்டு வைப்பது நூற்புழு தாக்கத்தில் இருந்து முழுமையாக பாதுகாக்கும்.வாய்ப்பு இருப்பவர்கள் 8 எண்ணிக்கையில் கூட நட்டு வைக்கலாம்.

பளபள கொய்யா பழங்கள் பெற போரான் சத்து

8) கொய்யாவுக்கு தேவையான போரான் சத்தினை தொடர்ந்து கொடுக்க மாதம் ஒரு முறை தரை வழியாகவும் தெளிவாகவும் எருக்கு இலை கரைசலை பயன்படுத்தலாம் . 200 லிட்டர் இருக்கு கரைசலை 200 மரங்களுக்கு தரைவழி மரத்திற்கு ஒரு லிட்டர் என பிரித்துக் கொடுக்கலாம். தெளிக்கும் போது தயாரிக்கப்பட்ட எருக்கு கரைசலை அப்படியே டேங்கில் ஊற்றி அடிக்கலாம். கிடைக்காதவர்கள் கடைகளில் விற்கும் போது சரியான அளவில் பயன்படுத்தவும்.இதனால் முறையான வடிவிலான கொய்யா கிடைப்பதுடன் விற்பனைக்கு ஏற்றவாறு பலப்பல என இருக்கும் பழங்களைப் பெறலாம்.

வேர் அழுகல் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட

9) பாதுகாப்பு முறையாக ஒவ்வொரு மரத்திற்கும் 5 மில்லி சூடோமோனஸ் 5 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து தரைவழி மாதம் ஒரு முறையாவது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தருவது நல்ல பல நல்ல பலன் தரும். இதனால் வேர் அழுகல் நோய் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

10) கொய்யாவில் நெல்லிக்காய் அளவுள்ள காய்கள் வரை அதிகம் தாக்கும் தேயிலை கொசுவில் இருந்து பாதுகாக்க கருவாட்டுப் பொறி வைப்பதுடன் வேப்பெண்ணெய் கரைசல் அடிப்பது மிகவும் நல்ல பலன் தரும்.பூ காய் ஆக மாறிய காலத்திலிருந்து எலுமிச்சை அளவுள்ள காயாக மாறும் வரை அடிக்கடி கொடுக்கலாம்.

மாவு பூச்சி  தொல்லை ஒழிய வெர்டிசீலியம் லக்கானி


100 லிட் நீருக்கு 300 ml கலந்து மாலை யில் தெளிக்கலாம். 6,12 நாட்களில் திரும்ப தெளிப்பது முக்கியமே

மேற்கண்ட செயல்களை தொடர்ந்து மாதவாரி அட்டவணையாக தயாரித்து செயல்படுத்துவதன் மூலம் கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரித்து, குறைவில்லாத லாபத்தினை பெற வாய்ப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.