கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு……. ஐரோப்பாவில் உணவு பஞ்சம்!!!!

ஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா?

ஆமா, அங்க தினசரி காய்கறி, பழம், பூ எல்லாத்துக்கும் தட்டுபாடு.

ஏன் அங்க விளையாதா?

விளையும், ஆனா அவங்க உணவு உற்பத்திய பெரு நிறுவனங்கள் கிட்ட குடுத்துட்டாங்க. வேதி உரம், பூச்சிகொல்லி அடிச்சு நிலமும் மலடாகிடுச்சு. நில உரிமையும் நிறுவனங்கள் கையில. வணிக பயிர், பால் உற்பத்தினு தான் நடக்குது.

ஆனா உணவு உற்பத்தி அங்க தான நடக்குது?

எங்க மலிவா விளைவிக்க முடியுமோ அங்க ஓடிட்டாங்க…

அது எங்கயாம்?

ஆப்பிரிக்கா. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா. அங்க இருக்கற காடுகளை அழிச்சுட்டு, நிலத்தை பூர்வ குடிகள் கிட்ட இருந்து பிடுங்கி பெறு நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு உணவு உற்பத்தி பண்ணுது.

சரி, இப்.ப என்ன பிரச்சினை?

அதான். வணிகம் முடங்கி போச்சே….துறைமுகங்கள், விமான நிலையங்கள் எல்லாம் மூடியாச்சு. உணவு கொண்டு வர முடியாது. நிலத்தில் வேலை செய்ய ஆள் இல்ல. உற்பத்தியும் நின்னு போச்சு.

அவங்க உணவு பாதுகாப்பை இழந்துட்டாங்க போல…

அவங்க மட்டும் இல்ல, தனக்கு இல்லாம எல்லாத்தையும் விற்பனைக்கு விளைவிக்கும் விவசாயி, காசு குடுத்தா என்ன சோறு வேணும்னாலும் கிடைக்கும்னு நினைக்கற நுகர்வோர்…இவங்க எல்லாருக்கும் பிரச்சினை தான்.

https://in.reuters.com/…/health-coronavirus-produce-insight…

Prakash Thangavel