கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர்
பயிரிடும் காலம் எங்கள் பகுதியில் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மண் கலந்த மண்ணில் நன்கு வளரும்.
நடவு முறை
2 அடி பார்
செடி இடைவெளி 1 1/2 அடி
அடி உரம்
5 டன் தொழு உரம்
விதைசெடி
கோலியாஸ் செடியின் குறுத்து அதாவது நுனி செடியை கில்லி நட வேண்டும் அந்த செடி 5 இஞ்ச் நீளம் இருக்க வேண்டும் அந்த செடியில் தண்டு ஊதா நிறத்தில் இருக்க வேண்டும் ( ஊதா நிறமாக மாற 3 மாதம் ஆகும்)
இந்த செடியை நட்டதில் இருந்து இரண்டு களை எடுக்க வேண்டும்
அடுத்து
நீர் பாசனம்
10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை
நோய்கள்
இலை பழுப்பு, கிழங்கு அலுகள், வேர் முடிச்சி
அறுவடை
6 மாத காலம் முடிந்ததும் கிழங்கு சிகப்பு கலர் இருக்கும் அதன் மைய பகுதி உடனே அறுவடை செய்யலாம்
மகசூள்
1 ஏக்கருக்கு 5 டன் முதல் 10 டன் வரை வரும் நல்ல பராமரிப்பு இருந்தால் 11 டன் எடுக்கலாம்
விலை விவரம் (10.3.2018 அன்று)
1 கிலோ 19 ரூ அறுவடை செய்து உடன் ஈர கிழங்கு
சிறு துண்டுகளலாக வெட்டி காய வைத்தது 1 கிலோ 150 ரூ
இதற்கு முன்பு இந்த கிழங்கு விலை 8 ரூ இருந்து 40 ரூ வரை இருந்தது இது கடந்து 10 வருடமாக விலை நிலவரம்
குறிப்பு
இந்த பயிர் செய்யும் முன்பு நாட்டு சோளம் பயிரிடுவது மிகவும் நல்லது.
நன்றி