சீரகம் – நஞ்சில்லா உணவு

Agriwiki.in- Learn Share Collaborate

#சீரகம்

சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி

நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது

அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்

அண்ணா வெண்டை சுவை மிக சிறப்பு என ருசித்து உணர்ந்து உணர்வை பகிர்ந்த போது நெஞ்சம் விம்மியது

எதை நோக்கிய பயணமோ அதற்கு அங்கீகாரமும் கிடைக்கப்பெறும் போது நிம்மதி பெரு மூச்சு பெரிதினும் பெரிதாய்

உணர்ந்தவர் பகிரும் போது உணர்வுகள் தான் முன்நிற்க்கிறது

நிறைகளாக ப்ளாஸ்டிக் அரக்கனை எத்தனை வகையில் தவிர்க்க இயலுமோ அத்தனை வகையிலும் தவிர்க்க முனைகிறோம்

குறைகளாக கருப்பு உளுந்து அப்பளம் ஏன் பொரிந்து புசு புசு என வரவில்லை இது அப்பளமா இல்லை மண்ணா எனும் கோப கேள்வியையும்

நாட்டு சுரை வாங்கி சென்றவர் முத்திய காய் என தெரிந்து விற்று என் தலையில் கட்டினீர்களா எனும் படு பயங்கர கோபகாரர்களை எதிர் கொண்டு புரிய வைத்து்

சீரகம் தன்னை சீராக்கி முன்செல்கிறது

நஞ்சில்லா உணவு என்ற எங்கள் கொள்கையில் சிறிதும் சமரசமில்லாமல்

ஒரு தாய் பிள்ளைகளாய் Parthiban Manickam Gowri Gauri வயதில் இளையோரும் பொருப்பில் பொறுமையில் மூத்தோருமான என் உடன் பிறவா உடன்பிறப்புகள் துணையோடு

நஞ்சில்லா உணவு

பிணியில்லா வாழ்வு என்ற உறுதியோடு

எனக்கு உறுதுணையாய் இருக்கும் அத்துனை நல்உள்ளங்கள் கைபிடித்து வழிகாட்ட சீரக குழந்தை உங்கள் கரம் பற்றி நடைபயில்கிறது

அன்பும் நன்றியும்

வாழ்தல் இனிது.