செம்மண்

செம்மண்
Agriwiki.in- Learn Share Collaborate

செம்மண்

முகநூல் அன்பர்களுக்கு் இன்ஞினியர்களுக்கும்
நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம். நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று.
இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட் உள்ளதால் உஷ்ணம் வெளியேற முடியாமல் சுவர் வெடிக்கிறது.

அந்தகாலத்தில் அஸ்திவரம் சுவர் ஆகியவற்றிற்கு் செம்மண்தான் பயன்படுத்தப்பட்டது. ஆகையால் வெடிப்புகள் இல்லை. செம்மண் குளிர்ச்சி

செம்மண் வகைகள் அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப்பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளதால், இவை சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆழமற்றது. இளகிய இயல்புட

இரும்பு(III) ஆக்ஸைடை (Fe2O3) இரும்பு 2 மடங்கு ஆக்ஸிசன் 3 மடங்கு இதை காற்று என்றும் சொல்லலாம். இப்படி செம்மண்ணால் கட்டப்பட்ட வீட்டில் வசிம்பவர்களுக்கு நோய் நொடிகள் வராது.

செம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் மணலும் கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக நீர் பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை கயோலினைட்] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை.

இப்படிப்பட்ட மண்ணை விட்டுவிட்டு மணலுக்கு சிமெண்ட்டுக்கு அலைகிறோம். வீட்டிற்குள் காற்றில்லாமல் ஏசி மாட்டுகிறோம்.

வீடு கட்டி 6 மாதந்தான் ஆகுது வெடிக்குதுன்னு சொல்றோம்.

சமீபத்தில் தொலைகாட்சியில் கண்டேன். கடலூரை சேர்ந்த காண்ட்ராக்டர் மணல் கிடைக்காததால் செம்மண்ணை நீரில் ஊறவைத்து வடிகட்டி மணல் எடுத்து வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று.

இது தேவையில்லாத வேலை அழகாக செம்மண்ணை வைத்தே கட்டிடம் எழுப்பலாம். பில்லர் இல்லாமல் கருங்கல் கடைக்கால் போட்டு அஸ்திவாரம் சுவர் செம்மண்ணில் எழுப்பலாம் ஆரோக்கியம். நிலநீர் காப்பற்றப்படும்.

அதைவிடுத்து தேவையற்ற செலவு செய்தும் ஒரு நல்ல வீடு நமக்கு அமைவதில்லை.

நன்றி
ஹரி