செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்
Agriwiki.in- Learn Share Collaborate
செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

🐐 செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.

🐐 மழைக்காலத்திலும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த நோய் செம்மறி ஆடுகளை அதிகளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

🐐 வைரஸ் எனப்படும் நச்சுக்கிருமியால் கொசுக்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் அதிக ஜூரத்துடன் சோர்வாக காணப்படும்.

🐐 மூக்கு மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக்கொண்டிருக்கும். நாக்கு சில சமயம் நீலநிறமாக மாறுவது உண்டு. கால்குளம்பின் மேல்பகுதி சிவந்து வலியுடன் இருக்கும்.

🐐 இதனால் ஆடுகள் நொண்டி நடக்கும். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் கூலிக்காட்ஸ் எனும் ஒருவகை கொசுவால் மட்டுமே பரவுகிறது.

🐐 மழைக்காலங்களில் கொசுவின் உற்பத்தி அதிகம் உள்ளதால் நோய் அதிகமாக பர

கொட்டகை அமைப்பு

🐐 ஆடுகளை இரவு நேரங்களில் மழை மற்றும் பனி தாக்குதல் இல்லாமல் மேடான கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். கொசுவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆட்டுக்கொட்டகையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது.

🐐 ஆட்டுக்கொட்டகையைச் சுற்றி உள்ள புதர்கள் அழிக்கப்படவேண்டும். t.me/MSRIGroupsAT கொசுக்கள் மாலை இருட்டும் நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் வந்து ஆடுகளைக் கடிப்பதால் இந்த நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் கொட்டகையில் அடைக்க வேண்டும். கொசுக்களை தவிர்க்க புகைமூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

🐐 நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அரிசி அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பை தவிர்க்கலாம்.

🐐 மேலும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்மூலம் நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பகிர்வு Manjunadhan Sri.