தென்னை வெள்ளை ஈக்களுக்கு உயிரியல் முறை தீர்வு

Agriwiki.in- Learn Share Collaborate

தென்னை வெள்ளை ஈக்களுக்கு ( Rugose Spiralling Whitefly (RSW) ) உயிரியல் முறை தீர்வு: மத்திய பயிர் பாதுகாப்பு மையம் தகவல்

தென்னை விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ள வெள்ளை ஈக்களுக்கு, உயிரியல் முறையை பயன்படுத்தி தீர்வு காணலாம் என மத்திய பயிர் பாதுகாப்பு மையம் ஊக்குவித்துள்ளது.
.
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், 30,000 எக்டருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதென்னையில கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னை விவசாயத்துக்கு பெரும் சவாலாக வெள்ளை ஈக்கள் மாறியுள்ளன.
.
வெள்ளை ஈக்கள், தென்னை ஓலையின் பின்பக்கம் முட்டையிட்டு, கரும்பூஞ்சாணத்தை ஓலைகளின் மேல் பூச்சாக ஏற்படுத்தி, உணவு தயாரிக்க முடியாமல் செய்து விடுகின்றன.
இதனால், தென்னைகளில் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிகொல்லிகளை பயன்படுத்தினால், எதிர்ப்பு திறன் அதிகரித்து விடும்.
.
.இதனால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
.
இந்நிலையில், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், வெள்ளை ஈக்களுக்கு தீர்வாக உயிரியல் முறையை முன் வைத்துள்ளது.’ஐசேரியா பூமோஸாரோசே(Isaria fumosorosea / formerly known as Paecilomyces fumosoroseus) எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து, அதை வெள்ளை ஈக்களுக்கு எதிர் உயிரியாக பயன்படுத்தி தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளது.
.
இந்த பூஞ்சாணத்தை விவசாயிகளே பெருக்கி பயன்படுத்தலாம். அதற்கு தேவையான அடிப்படை பூஞ்சாண திரவத்தை பயிர் பாதுகாப்பு மையமே இலவசமாக வழங்குகிறது.

மேற்கண்ட பூஞ்சாளம் பயன்படுத்தப்பட்ட தென்னை பயிரில் வெள்ளை ஈக்கள் குறிப்பிடத்தகுந்த அளவு கட்டுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
.
‘ஐசேரியா பூமோஸாரோசே’ பூஞ்சாணம் தென்னையில் வெள்ளை ஈக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தீர்வாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
.
விவசாயிகள் பரவலாக பயன்படுத்த முடியும்.தயாரிக்கும் முறை:
.
தண்ணீர், 100 லிட்டரில் இரண்டு கிலோ வெல்லத்தை கலந்து கொள்ள வேண்டும். அதில், ‘ஐசேரியா பூமோஸாரோசே’ பூஞ்சாணத்தை ஊற்ற வேண்டும். அத்துடன் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலந்து கொள்ள வேண்டும். தினமும், 3 – 4 முறை கலவையை நன்கு கலக்கி விட வேண்டும். நான்காவது நாளில் மேலும் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலக்க வேண்டும். அதன் பின், ஆறு நாட்கள் கலவையை பாதுகாக்க வேண்டும்.இப்படி, 10 நாட்களுக்கு பிறகு, கலவை பயன்பாட்டுக்கு தயாராகி விடும்.
.
தெளிப்பு முறை
ஒரு லிட்டர் தண்ணீரில், 3 – 5 மி.லி., பூஞ்சாண கலவையை கலந்து, பாதிக்கப்பட்ட பகுதி மீது தெளிக்க வேண்டும்.தெளிக்கப்பட்டவுடன், ஓலைகளில் பரவும் ‘ஐசேரியா பூமோஸாரோசே’ பூஞ்சாணம், வெள்ளை ஈக்கள், முட்டைகளை மேல் படர்ந்து அவற்றை முழுமையாக அழித்து விடும்.
.
மேலும் பூஞ்சாளத்தால் தாக்கப்பட்ட வெள்ளை ஈக்கள் பறந்து சென்று அருகில் உள்ள தாக்கப்படாத பகுதிகளில் படும்போது அவையும் அழிந்தவிடும் தன்மை உள்ளது.
.
எனவே இந்த இயற்கை முறையை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.
.
Central Integrated Pest Management Centre (Govt of India)Trichy
.
Address: 620020, 16, Hazrath Abdul Salam Street, Kajamalai, Edamalaipatti Pudur, Tiruchirappalli, Tamil Nadu 620023
.Phone: 0431 242 0190

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.