தேமோர் கரைசல்

தேமோர் கரைசல்

தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும்.

தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும்.

தேவையான பொருட்கள்:

🍃 புளித்த மோர் -.5லிட்டர்
🍂 முற்றிய தேங்காய் – 10

செய்முறை

🍁 இரண்டரை லிட்டர் தயிரில், சம பங்கு தண்ணீரை சேர்த்து மோராக கடைந்து கொள்ளவும்.
🍁 தேங்காயை துருவி, தண்ணீர் விட்டு அரைத்து, இரண்டு முறை அதிலிருந்து பாலை பிழிந்து எடுக்கவும்.
தேங்காய் பால் ஐந்து லிட்டர் வரும் அளவிற்க்கு தண்ணீரை சேர்க்கவும்.

குறிப்பு :

தேங்காயிலிருந்து முழுவதுமாக பாலை நன்கு பிழிந்தெடுக்க, வெதுவெதுப்பான நீரை ஊற்றி அரைத்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பிழியும்போது தேங்காயிலுள்ள பால் முழுதுமாக பிரிந்து வரும்.

🍁மண்பானை அல்லது பிளாஸ்டிக் டிரம்மில் புளித்த மோர் மற்றும் தேங்காய்பாலை ஒன்றாக ஊற்றி, மூடி நிழலில் 7 நாட்கள் வைக்கவும்.

( மண்பானையில் ஊற்றி வைக்கும் கரைசலை எரு குப்பை அல்லது மண்ணில், பானையின் வாய் பகுதியை மட்டும் மேலே தெரியும்படி வைத்துவிட்டு, குழி தோண்டி புதைத்தும் வைக்கலாம் )

🍁 7 நாட்கள் கழித்து, நன்கு கலக்கி, வடிகட்டி பயிருக்கு தெளிக்க பயன்படுத்தலாம்.

தெளிக்கும் அளவு

10 லிட்டர் தண்ணீருக்கு – 1 லிட்டர் தேமோர் கரைசல்.

பயன்கள்

🍁 தேமோர் கரைசலில் சைட்டோசைம் இருப்பதினால், இது தாவரத்தின் வளர்ச்சி செல்ளை தூண்டி வளர்ச்சியை துரிதப்படுத்தும் நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.

🍁பூக்கள் வரும் தருணத்தில் பயிர்களின் மேல் தெளிப்பதின் மூலம் ‘பூக்கள் உதிராமல் நிலைக்கும்.

🍁 தேமோர் கரைசலை பூக்கும் பருவத்தில் தெளிப்பதினால், தெளிக்கப்படும் பயிர்களின் விளைபொருட்கள் நன்கு திரட்சியாக, நல்ல பளபளப்புடனும், சுவையுடனும் இருக்கும்.

தேமோர் கரைசல் தயாரான ஒரு வாரத்திற்க்குள் பயன்படுத்திவிடுவதால், அதன் குணநலன்கள் மாறமல் பயிருக்கு சென்றடையும்.

தேமோர் கரைசல் தயாரான ஒரு வாரத்திற்க்குள் பயன்படுத்திவிடுவதால், அதன் குணநலன்கள் மாறமல் பயிருக்கு சென்றடையும்.

அர்வின் ஃபார்ம்ஸ்
இயற்கைவழி வேளாண்பண்ணை, போளூர்