தேள் கொடுக்காப்புளி பனைமரம்

இன்னைக்கு என்னடா எழுத கண்டெண்ட் ஒன்னும் கெடைக்கலைன்னு யோசனை பண்ணிக்கிட்டே இருந்தேன். இதோ இது ரெண்டும் கண்ணுல சிக்கிடுச்சு. ஏன்னா பதிவு போடாம என்னால இருக்க முடியாது. உங்களால கேள்வி கேட்காம இருக்க முடியாது. ஏன்னா நம்ம பதிவுகள் அந்த ரகம்.

என்ன பண்றது வாழ்க்கைன்னா இதெல்லாம் இருந்தாதானே சுவாரசியம். சரி விசயத்துக்கு வருவோம்.

போன மாசம் தேனி பக்கம் போய் இருந்தேன்.அங்க நம்ம நண்பர் கொடுக்காப்புளி அதாங்க நம்ம கோணபுளியங்காய் கால் கிலோ வாங்கினார்.விலையை கேட்ட எனக்கு தூக்கி வாரி போட்டது ஏன்னா விலை 40 ரூபா. அப்படினா கிலோ 160 ரூபயா?  அட என்னடா சோதனை நாம சும்மா கொடுத்தாலே தூக்கி ஏறிவோம் இதுக்கு இவ்வளவு விலையா ஆடிப்போனேன்… அப்புறம்…

இந்த cseb மட் பிரிக்ஸ் அடிக்க கடுக்காய் வாங்க போனேன் கிலோ 20 ரூபாய் என்றான். கம்முன்னு 5 கிலோ காச கொடுத்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.

அப்புறம் எங்க அத்தை வீட்டுக்கு போய் இருந்த போது வெடாம் பழத்தில் (wood apple விலாம்பலம்) ஜூஸ் போட்டுக் கொடுத்தனர், குடித்தேன் அவ்வளவு சுவை “”கிலோ எவ்வளவு என்று”” அத்தையிடம் கேட்டேன் “”நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன் கண்ணு அதுவே கிடைக்கல தேடிப்பிடிச்சு வாங்கினேன்” அப்படின்னு சொன்னாங்க சரி இதையும் மனசுல வச்சுக்குங்க அடுத்து….

இதேபோல புங்கை மரம் இலுப்பை மரம் போன்றவையும் நல்ல விலைக்கு தற்போது தேவை இருக்கிறது. அல்லது எதிர்காலத்தில் தேவை இருக்கும்.

இப்போது எனக்கு மிகப்பெரிய சந்தேகம் என்னன்னா நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன் கொண்டது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல மரங்களும் நிறைய உபயோக திறனை கொண்ட மரங்கள் அழிந்து வரும் நிலையிலும் இருப்பது நாம் மறக்கக் கூடாத விஷயம்.

அவையும் நல்ல வருமானம் தரக் கூடியவை அல்லது எதிர்காலத்தில் தரலாம். எதிர்காலத்தை நோக்கிய சிந்தனை மட்டுமே வளத்தை தரும்.

பனை மரத்தைப் போலவே இவைகளும் பராமரிப்பு,நீர் போன்றவை தேவைப்படுவதில்லை. இவைகளும் பூச்சி புழுக்கள் மூலம் பாதிப்படைவதில்லை.
சந்தையை நோக்கி நாம் ஓடத் தேவையில்லை நம்மை நோக்கி சந்தை ஓடிவரும்.

((( சந்தையை தன்னை நோக்கி வர வைப்பவன் அல்லது சந்தையை உருவாக்குபவன் மட்டுமே உண்மையான லாபம் ஈட்டும் விவசாயி))))

நிறைய நண்பர்கள் தற்போது பனை மரத்தை நடவு செய்திருப்பதாக முகநூல் மூலம் அறிகிறேன். நாம் பனை மரத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் இன்னும் பிற அழிந்து வரும் நிலையில் இருக்கும் மரங்களின் மீதும் நமது கவனம் இருக்க வேண்டும் முடிந்தவரை அவற்றையும் நடவு செய்யுங்கள்.

((((சரி இதுக்கு எதுக்குடா தேளின் படத்தை பதிவிட்டாய் என்று கேட்கிறீர்களா அது சும்மா நம்மள பார்க்கலாம்னு வந்துச்சு பாத்துட்டு விட்டுட்டேன்)))))

Hari Prasath