நமது நண்பர்கள்:
——————————-
விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான சில உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பாக்டீரியா- ஒரு செல் உயிரினமான இவை ஒவ்வொரு 2௦ நிமிடத்திற்க்கும் இரண்டு மடங்காக பெருகும். மண்ணில் உள்ள சத்துக்களை தாவரங்கள் உண்ணும் வகையில் மாற்றி தரும் முக்கிய வேலையை செய்கிறது. நாட்டு மாட்டின் சாணத்தில் பல நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளது.
பட்டாம்பூச்சி, தேனீ – மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.
எறும்பு- பயிர்களை தாக்கும் பூச்சிகளின் முட்டைகளை உணவாக எடுத்து கொள்கிறது. புழுக்களையும் உணவாக எடுத்து கொள்ளும். இவற்றின் மூலம் தீமை செய்யும் புழு பூச்சிகள் கட்டுபடுத்தப்படுகிறது.
சிலந்தி- இது ஒரு பூச்சிகொல்லி.
நன்மை செய்யும் பூச்சிகள்- இவைகள் பயிரை தாக்கும் பூச்சிகளை உணவாக எடுத்து கொள்ளும்.
தவளை, பல்லி- இவைகளுக்கு உணவு பூச்சிகள்.
பாம்பு- இவையும் விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை தான்.
பறவைகள்- ஆந்தை, கரிக்குறுவி, சிட்டுகுறுவி போன்ற குருவிகள் விரும்பி உண்ணும் உணவே புழு பூச்சிகள் தான்.
விலங்குகள்- பூனை போன்றவை எலிகளையும், பூச்சிகளையும் தேடி தேடி கொள்ளும்.
இப்படி பலவகைகளில் நமக்கு உதவ நமது நண்பர்கள் இருக்கும் பொழுது நாம் ஏன் அயல் நாட்டினர் தயார் செய்த ரசாயன மருந்துகளையும், சிறுக சிறுக நமது உயிரையும் காவு கொள்ளும் விஷமருந்துகளையும் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். உணவே மருந்து என்பது போய் உணவெல்லாம் விஷமாக மாறிவிட்டது.
இதனால் நமக்கு என்ன பயன், என்ற எண்ணத்தில் நம்மை நாமே ஏமாற்றி கொண்டு நமது சந்ததிகளையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறோம்.
பழத்தை பழுக்க வைக்க கூட ஸ்ப்ரே. பளபளக்க வைக்க மெழுகு. கலரூட்ட ஊசி. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசாங்கம். என்ன கொடுமை.
எங்கு பார்த்தாலும் கடை விரித்து காத்து ஆங்கில மருத்துவர்கள் கூட்டம். நாமும் சலிக்காமல் அங்கு சென்றாலும் நோய்கள் நம்மை தொடர்ந்து விரட்டுகிறது.
நமது நண்பர்களை விரட்டி விட்டு ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறோம்.
இதற்க்கெல்லாம் தீர்வுதான் இது!. நமது நண்பர்களை நமது தோட்டத்திற்கு வரவைப்போம். அவர்கள் தங்க ஏற்ப்பாடு செய்வோம். அவர்கள் நமது வேலையை செய்து விடுவார்கள்.
‘’ நஞ்சில்லா உணவு பொருளை உற்ப்பத்தி செய்து, நமது குடும்பத்திற்கும் உலகுக்கும் வழங்குவோம்’’. நோய் நொடியில்லாமல் வாழ வழி செய்வோம்.