நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி
நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி – ஒரு பார்வை.
ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத முழு நிலக்கடலையை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்.
ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும்.
பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம்.
பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலின் அடர் அல்லது நீர்த்த தன்மை பொருத்து ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும்.
முழு நிலக்கடலையை ஒரு நாள் ஊறவைப்பதால், முளைகட்டும் பருவத்தை அடைகிறது. இதனால் சத்து மிகுவதைக் காணலாம்.
நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும்.
திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது
திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம்.
4 – 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம்.
பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.
மக்கு சத்து நிறைந்த மண்ணாக இருப்பின் இன்னும் மிக நல்ல பலனை தரும்.
15 நாள் இடைவெளியில் பயன்படுத்தவும்.
திருப்பூர் பிரியா தரும் கூடுதல் தகவல்:
நிலக்கடலையைத் தவிர பூச்சரித்த அல்லது பழைய தேவைப்படாத உடைத்த அல்லது முழு பருப்பு வகைகள் கைவசம் இருந்தாலும் மேற்சொன்ன சொன்ன முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற பருப்பு வகைகளில் எண்ணைப் பதம் இருக்காது என்பது ஒரு கூடுதல் தகவல்.
அதே போல் உடைத்த பருப்பை ஊறவைக்கும் போது முளை கட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்த பருப்பு சிறந்தது என்ற கேள்வி எழும். என் தேர்வும் வாக்கும் என்றும் எப்பொழுதும் முழு நிலக்கடலைக்குத் தான்.
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்