நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை

Agriwiki.in- Learn Share Collaborate

நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை:

 

நிலப்போர்வை வகைகள் :

 

பொதுவாக , நிலப்போர்வை இரண்டு முக்கிய வகையாக உள்ளது .

1.கரிமநிலப்போர்வை ( Organic )

2. கனிமநிலப்போர்வை ( Inorganic )

 

1.கரிம நிலப்போர்வை ( Organic mulching ) ;

ஒரு கரிம நிலப்போர்வை நெல் வைக்கோல் , கோதுமை வைக்கோல் , மரப்பட்டை , உலர்ந்த புல் மற்றும் இலைகள் , மரத்தூள் போன்ற இயற்கை பொருட்களால் ஆனது .

ஆனால் இந்த கரிம நிலப்போர்வை எளிதில் சிதைவடைகிறது , மேலும் அடிக்கடி மாற்றீடு தேவைப்படுகிறது . மேலும் அவை பூச்சிகள் , நத்தைகள் மற்றும் வெட்டுப்புழுக்களை ஈர்க்கின்றன .

a ) வைக்கோல் நிலப்போர்வை :

 

கரிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருள் வைக்கோல். நெல் மற்றும் கோதுமை வைக்கோல் , காய்கறி பயிர் மற்றும் பழ பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான நிலப்போர்வை ஆகும் . நெல் வைக்கோல் மற்றும் கோதுமை வைக்கோல் சிதைந்த பின் மண்ணை அதிகவளமாக்குகிறது .

b . ) புல்லின் துண்டுகளில் நிலப்போர்வை :

எளிதில் கிடைக்கக்கூடிய பச்சை புல் அல்லது உலர்ந்த புல் நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படுகிறது . புல் சிதைந்த பிறகு மண்ணுக்கு நைட்ரஜனை வழங்குகிறது .

கரிம நிலப்போர்வை குறைபாடுகள் :

1.கரிம நிலப்போர்வை சில நேரங்களில் மோசமாக வடிகட்டிய மண்ணில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது .

2. இது மண்ணை மிகவும் ஈரப்பதமாக்குகிறது , எனவே வேர் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறைகிறது .

3. பல கரிம வகை நிலப்போர்வை பூச்சி நத்தைகள் மற்றும் எலிகளுக்கு தங்குமிடத்தை வழங்குகிறது .

2.கனிம நிலப்போர்வை ( Inorganic mulching ) :

பிளாஸ்டிக் மென் படலம் , ஜியோ டெக்ஸ்டைல்ஸ் , சரளை மற்றும் கூழாங்கற்கள் போன்ற பொருள்களை கனிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தலாம் . அனைத்து கனிம நிலப்போர்வைகளுக்கிடையில்
பயன்படுத்தப்படும் பொதுவான பொருள் பிளாஸ்டிக் நிலப்போர்வை . இது எளிதில் சிதைவதில்லை.

பிளாஸ்டிக் நிலப்போர்வை :

பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன .

1.கருப்பு நிலப்போர்வை :
Black Mulch
Black Mulch

கருப்பு நிலப்போர்வையின் பெயர் குறிப்பிடுவது போலவே இதன் இருபுறமும் கருப்பு நிறத்தில் இருக்கும் . இந்த நிலப்போர்வை எந்த வகையான ஒளியையும் கடத்தாது . ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் , களைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது . கத்தரிக்காய் , வெண்டை , பச்சை மிளகாய் உற்பத்தி செய்ய கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது .

2.மஞ்சள் – பழுப்புநிலப் போர்வை :
Yellow and brown mulch
Yellow and brown mulch

இந்த வகையில் பழுப்பு நிற பக்கமானது மண்ணைத் தொடுகிறது மற்றும் மஞ்சள் மேல்நோக்கி உள்ளது . வெள்ளை ஈ அதிகம் பாதித்த பகுதியில் இது பயன்படுத்தப்படுகிறது . மஞ்சள் நிறம் வெள்ளை ஈயை ஈர்க்கிறது , எனவே வெள்ளை ஈ நிலப்போர்வையுடன் தொடர்பு கொள்ளும்போது சூரிய வெப்பத்தின் காரணமாக அவை கொல்லப்படுகின்றன . கோடைகால காய்கறிகளை வளர்ப்பதற்கு இந்த மென் படலங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன .

3.வெள்ளி – கருப்பு நிலப்போர்வை :

 

black-silver-mulching-film
black-silver-mulching-film

விவசாயிகளிடம் மிகவும் பிரபலமானது இந்த வெள்ளி கருப்பு நிலப்போர்வை . இந்த நிலப்போர்வை அனைத்து விதமான பயிருக்கும் ஏற்றது . இந்த நிலப்போர்வை 27 % ஒளியை பழங்கள் மற்றும் தாவரங்களுக்கு பிரதிபலிக்கிறது . மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களில் அதிக ப்ரீமொன்டேன் ( premontane ) நிறத்தில் இருப்பது காணப்படுகிறது . காய்கறிகள் , பூக்கள் , ஆர்கிட்கள் உற்பத்தி செய்ய வெள்ளி – கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது .

வெள்ளை கருப்பு நிலப்போர்வை ஒளிச்சேர்க்கை கதிர்வீச்சு 60 % க்கும் மேலான ஒளியை தாவரத்திற்கு அளிக்கிறது . எனவே தாவர வளர்ச்சியும் மேம்படுத்துகிறது , மற்றும் பூச்சி , நோய் தாக்குதலும் குறைகின்றன . எனவே , இதனால் விவசாயிகள் அதிக உற்பத்தி பெறுகின்றனர் . கோடையில் இது சிறப்பாக செயல்படுகிறது .

பட்டாணி , முட்டைக்கோஸ் , மற்றும் காலிஃபிளவர் உற்பத்தி செய்ய வெள்ளை கருப்பு நிலப்போர்வை மிகவும் ஏற்றது . அதிக மகசூல் பெறவும் உதவுகிறது .

red-tomato-mulch
red-tomato-mulch
நல்ல நிலப்போர்வை தேர்ந்தெடுக்கும் முறை :

அதிகபட்ச நன்மைகளைப் பெற சரியான நிலப்போர்வை மென் படலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் .

தடிமன் :

காய்கறி பயிருக்கு , மென் படலம் தடிமன் 15 மைக்ரான் முதல் 30 மைக்ரான் வரை இருக்கும். ஆர்கிட் பயிர் மென் படலம் தடிமன் 100 மைக்ரான் முதல் 150 மைக்ரான் வரை இருக்கும் . சிறிய கால பயிர்களுக்கு 25 மைக்ரான் பயன்படுத்த வேண்டும் .

நீண்ட ஆயுள் உள்ள பயிருக்கு மண்ணில் கல் அதிகமாக இருந்தால் 150 மைக்ரான் மென் படலம் தேர்ந்தெடுக்கலாம் , இல்லையெனில் 100 மைக்ரான் மென்படலம் தேர்ந்தெடுக்க வேண்டும் .

சோதனை நிலப்போர்வை மென் படலம் :

ஒரு சிறிய துண்டு பிளாஸ்டிக் நிலப்போர்வை காகிதத்தை எடுத்து சூரிய ஒளியை கடத்துகிறதா என்று சரிபார்க்க வேண்டும் . அவ்வாறு அது ஒளியை கடத்தினால் அதை பயன்படுத்தகூடாது .

புதுப்பிக்கத்தக்க தரமான பொருள் வாங்குதல் :

ஒரு நல்ல நிலப்போர்வை காகிதம் நீண்ட ஆயுள் , காற்றழுத்தம் மற்றும் வெப்ப ஆதாரம் கொண்டு இருக்கவேண்டும் ( அவை எந்த ஒளியையும் கடத்தக் கூடாது ) .

நிலப்போர்வை நிறுவுதல் எப்படி ?

 

1. காய்கறிகளில் , பயிர் நிலப்போர்வை படுக்கை தயாரிக்கும் நேரத்தில் செய்யப்பட வேண்டும் , ஆனால் ஆர்கிட் பயிர்களில் , பயிரிடுதலுக்கு பிறகு தான் செய்ய வேண்டும் .

2. நிலப்போர்வை மென் படலம் நிறுவும் முன் நிலத்தில் உள்ள வரிசைகளைக் குறிக்க வேண்டும் .

3. மிளகுச்செடிகள் , காலிஃபிளவர் , முட்டைக்கோஸ் போன்ற இரண்டு வரிசை பயிர்களுக்கு மேல் அகலம் 75 முதல் 90 செ.மீ கொண்ட படுக்கைகளைத் தயாரிக்க வேண்டும் .

4. ஒற்றை வரிசை பயிர்கள் தக்காளி , கத்திரிக்காய் , மிளகாய் , வெள்ளரி போன்றவற்றைக்கு மேல் அகலம் 45-60 செ.மீ இருத்தல்வேண்டும் .

5. நிறுவுவதற்கு முன் , படுக்கை தட்டையாக உள்ளதா என்பதை உறுதிசெய்து , முந்தைய பயிர் பாகங்கள் , கிளைகள் , தண்டு , கல் போன்றவற்றை அகற்ற வேண்டும் அவை நிலப்போர்வையை சேதப்படுத்தக்கூடும் .

6. படுக்கையில் சொட்டு நீர்குழாய்கள் ( Drip Lateral ) வைத்து , அவை வேலை செய்கிறதா , இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் .

7. நிலப்போர்வை மென் படலத்தின் மூலைகளில் மண்ணை வைத்து மூடவேண்டும் .

8. கண்ணாடி அல்லது சூடான குழாய் உதவியுடன் ஒரு துளை போடவேண்டும் .

பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க நிலப்போர்வை பயன்படுத்தலாம் . பயிர் தேவைக்கேற்ப தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

நிலப்போர்வைஅல்லது மூடாக்கின் பயன்கள்:

 

1. நீர் ஆவியாதலை தடுத்தல் : சூரிய ஒளி மண் மீது படுவதை நிலப்போர்வை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ தடுக்கின்றது . இதன் மூலம் நீர் ஆவியாதல் தவிர்க்கப்படுகிறது.

2.மண்ணிலுள்ள ஈரத்தை தக்க வைத்தல் : நீர் ஆவியாதலை தடுப்பதன் மூலம் மண்ணிலுள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது .

3. மண்ணரிப்பை குறைத்தல் : நிலப்போர்வையானது மணமீது நீரின் தாக்கத்தையும் , காற்றின் உராய்வையும் குறைக்கும் , இதன் மூலம் மண்ணரிப்பானது குறைக்கப்படுகிறது.

4. மண்ணிற்குள் நீர் ஊடுருவலை அதிகரித்தல் : நிலப்போர்வையானது மண்மீது நீரின் வேகத்தை குறைத்து மண்ணுக்குள் நீர் ஊடுருவலை அதிகரிக்கின்றது .

5. களைச் செடிகள் வளர்ச்சியை தடுத்தல் : நிலப்போர்வை அமைப்பதன் மூலம் பயிர்களுக்கு நடுவே உள்ள திறந்தவெளி முற்றிலும் மூடப்படுகிறது . இதனால் களைச்செடிகளின் விதைகள் முளைக்காமல் போகின்றன இவ்வாறு களைச்செடிகளின் வளர்ச்சியை நிலப்போர்வை தடுக்கின்றது .

6. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குதல் : கரிய நிலப்போர்வை பொருட்கள் மக்கி உரமாகி , பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது

7. பயன்தரும் நுண்ணுயிரிகளை அதிகரித்தல் : கரிம நிலப்போர்வை பொருட்களை மண்ணிற்கு செலுத்துவதன் மூலம் பயன் தரும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது .

8. உகந்த வெப்பநிலையை தருதல் : கோடை காலத்தில் சூரிய ஒளி மண்மீது படுவதை தடுப்பதன் மூலம் மண் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கின்றது . அதேபோல் , குளிர்காலத்தில் மண் வெப்பநிலை குறைவதை தடுக்கின்றது .

இவ்வாறு நிலப்போர்வையானது கோடை மற்றும் குளிர்காலங்களில் உகந்த வெப்பநிலையை தருகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.