நீங்கள் ஏன் இதை செய்வதில்லை?
90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிலவுகளை வைத்துவிடுகிறார்கள். நானும் வைத்துவிடுகிறேன். காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை. மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது. நீங்கள் ஏன் இதை செய்வதில்லை?
Senthil R Kumar பழைய கட்டுமான முறையில் இப்பே தண்ணி விட்டு அதிகமாக நனைப்பது இல்லையே. மரத்தில் ஈரம் ஏறி வளையலாம் கரையான் வர வாய்ப்பு இருக்குன்னு தவிர்த்து இருக்கலாம்
Hari: அதுக்குத்தான் ஒரு கோட் primer அல்லது வார்னிஷ் அடித்து விடுவோம் …முன்பே
Thamilappa Thamilappa இந்த முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக காணப்படும். அஸ்திவாரம் போடுவதை போல நிலை வைப்பதையும் சடங்காக செய்வார்கள்.