நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்

நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்

குறுவை பட்டத்தில் நெல் விவசாயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்:

இயற்கை இடுபொருட்கள்:

1. ஜீவாமிர்தம் 600 லிட்டர்
2. ஹியூமிக் அமிலம் 2 லிட்டர்
3. மீன் அமிலம் 15 லிட்டர்
4. பஞ்சகாவ்யா 15 லிட்டர்
5. இஎம் கரைசல் 20 லிட்டர்

பஞ்சகாவியா மற்றும் ஈயம் கரைசலை தெளிப்பு மட்டும் அல்லது தெளிப்பு மற்றும் தரைவழி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கை பாதுகாப்பு பொருட்கள்
1. மூலிகை பூச்சிவிரட்டி 50 லிட்டர்
2. அக்னி அஸ்திரம் 20 லிட்டர்
3. கற்பூரகரைசல் 4 லிட்டர்
4. வேப்ப எண்ணெய் 4 லிட்டர்

ஏதாவது இரண்டு கரைசல்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

உயிரியல் பாதுகாப்பு பொருள்கள்:
சூடோமோனாஸ் 2 லிட்டர்
பேசில்லஸ் சப்டிலிஸ் 2 லிட்டர்
பேஸ்ஸிலோ மைசிஸ்-2 லிட்டர்
பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் 2 லிட்டர்.

மேற்கண்ட உயிர் உரங்களை கையிருப்பில் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

உயிரியல் உணவு பொருட்கள்:
1.அசோஸ்பைரில்லம் 4 லிட்டர் அல்லது 8 கிலோ
2. பாஸ்போபாக்டீரியா 3 லிட்டர் அல்லது 6 கிலோ
3.பொட்டாஷ் பாக்டீரியா ஒரு லிட்டர் அல்லது 4 கிலோ
4.ஜிங்க் பாக்டீரியா ஒரு லிட்டர் அல்லது இரண்டு கிலோ
5. வாம்இரண்டு லிட்டர் அல்லது 4 கிலோ

இயற்கை இடுபொருள் களோடு மேற்கண்ட உயிர் உரங்களை கொடுப்பது நல்லது.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்