பசுமை நிறைந்த வீடு

பசுமை நிறைந்த வீடு

வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.

அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம். வாங்க

இது போல பசுமை நிறைந்த வீடுகளை பார்க்கும் போது தமக்கு இது ஒரு சிறிய வீடு என்ற எண்ணமே வருவதில்லை.

ஒரு சிறிய வீட்டின் வரைபடம் முதல் , 3D காட்சி, மற்றும் உண்மையான வீட்டின் புகைப்படங்களுடன் ஒரு புகைப்பட தொகுப்பு உங்களுக்காக நண்பர்களே…

முடிந்த வரை நகர எல்லைக்குள் மனை வாங்குவதை தவிருங்கள். கொஞ்சம் நகரை விட்டு வெளியே இருந்தாலும் சரி நண்பர்களுடன் இணைந்து கொஞ்சம் பூமி வாங்கி பிரித்து கொள்ளுங்கள். கொஞ்சம் நகரத்தில் வாங்கும் விலைக்கு அதிக இடத்தையும் வாங்க முடியும். நல்ல காற்றோட்டமாகவும் இருக்கும்.

நன்றி
நான் உங்கள் ஹரி