பசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்

Agriwiki.in- Learn Share Collaborate

 

நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை வெங்கடாசலம்  தன்னை இயற்கையில் கரைத்துக் கொண்டார்.

அவரது நினைவாக…….

நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை வெங்கடாசலம் இன்று மாலை (31-7-20) தன்னை இயற்கையில் கரைத்துக் கொண்டார்.அவரது நினைவாக…….

Posted by Ramasamy Selvam on Thursday, July 30, 2020

 

 

 

பாமயன் அவர்களின் அஞ்சலி:
என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர் பசுமை வெங்கடாசலம் 30.7.20 ஆம் நாள் மறைந்துவிட்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு. காலையில் அவரது தொலைபேசி அழைப்பால் எழுந்த நாட்கள் பல உண்டு. இரண்டு மாதங்களாக எந்த அழைப்பும் இல்லை. திடீரென ஒரு நாள் நடையனூர் வெங்கட் பசுமை வெங்கடாசலத்திற்கு உடல்நலம் சரி இல்லை என்று கூறினார். நானும் உடனே தொடர்பு கொண்டேன். ஆனால் தொலைபேசியில் அவரிடம் பேச முடியவில்லை. அந்தோ அவரைப் பார்க்கவே முடியாமல் இயற்கை ஆக்கிவிட்டது.
அவர் ஒட்டுண்ணிகள் தயாரித்து உழவர்களுக்குக் கொடுக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கி நாங்கள் இணைந்து பயிற்சி முகாம்கள் நடத்தியதுவரை மனக்கண்ணில் நிழலாடுகிறது. எத்தனை நாட்கள் இரவோடு இரவாக பயிற்சிக்கான பொருள்களைத் தயாரித்துள்ளோம். சத்தியமங்கலம் மீனாட்சி திருமண மண்டபத்திற்கு அந்தப் பெருமை சேரும்.
அகழி முறைப் பண்ணையம் என்பது அவரது சிறப்பான கண்டுபிடிப்பு. பல பண்ணைகளை உருவாக்கியுள்ளார். விடாப்பிடியான உழைப்பாளி. யாரையும் சட்டை செய்யமாட்டார். தாளாண்மையில் தொடர்கட்டுரைகள் எழுதினார் என்று சொல்வதைவிட எழுத வைத்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இயற்கை தனது இனிய மகனை அழைத்துக்கொண்டது.

துயரமுடன் பாமயன்

==============

ஐயா திரு வெங்கடாசலம் Venkatachalam Sangu இயற்கையுடன் இயந்தார்.

ஐயா நம்மாழ்வார் உடன் பயணித்தவர்
விவசாயத்தில் பொருளியல் தன்னிறைவு அடைய அவர் அவருக்கு ஏற்ப பண்ணை அமைப்பை உருவாக்கும் பணி செய்து கொண்டு இருந்தார்.
என் மனதுக்கு இனியவர், எனக்கு தொடர்ந்து மரபு கட்டுமானைத்தை முன் எடுக்க ஊக்கவித்து கொண்டு இருந்தார்.

மேலும் ஐயா அவர்கள் நமது Hari Prasath அவர்களின் தந்தை.

ஐயா அவர்களின் ஆன்மா இயற்கையுடன் அமைதி பெறுவதாக    – இளஞ்சேரன் 

==============

ஆசானுக்கு அஞ்சலி‌ : by  Haree Karthick 

ஹரி ” விவசாயத்துல நம்ம தோற்றுப் போறதுக்கு ஞாயமா நம்ம பொருளுக்கு விலை கிடைக்காம இருக்கிறது ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கவனிக்காம தோற்று போயிட்டே இருப்போம் அது பல பேருக்கு என்ன என்று தெரியாம இருக்கு அதுதான் ‘பண்ணை வடிவமைப்பு’!!

நம்ம பண்ணை முதல்ல அதுவே தன்னை தானே தகவமைத்து கொள்கிற மாதிரி தயார் பண்ணிட்டோம்னா . அதற்கு அப்பறம் அதுல இருந்து நம்ப விதைப்பதும் அறுவடையும் பண்றது மட்டும் தான் வேலையா இருக்கும். இப்படி நம்ம பண்ணையை உழவு இல்லாத பண்ணையா மாற்றும் போது விவசாயத்துல நமக்கு செலவும் குறையும் நம்ம பொருளாதார ரீதியாக முன்னேறவும் முடியும்.

இந்த வார்த்தைகள்தான் அவர் என்கிட்ட அடிக்கடி சொல்றது.விவசாயம் பத்தி யார் என்ன பேசினாலும் அவர் இந்த கருத்தை தான் அவர் எப்பவுமே முன்வைப்பார்.

விவசாயத்துல நீங்க புதுசு புதுசா என்ன வேணா பண்ணுங்க ஆனால் அது மண்ணுக்கும் சூழலுக்கும் கெடுதல் உண்டாக்காம உனக்கும் அதிலிருந்து பணம் வருதா அதையும் பாரு. சும்மா இயற்கை, வாழ்வு அப்படின்னு சுத்திட்டு இருந்தா இருக்கிற விட்டுப்புட்டு கோமணத்தோட தான் போகோனும் அதையும் மனசுல வெச்சுட்டு விவசாயம் பண்ணுங்க என்பார்.

இவர் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் உழவாண்மை பண்ணை என்ற வடிவமைப்பில் பண்ணி வெச்சு இருக்காரு. அதை எல்லாம் இணைத்து ஒரு நெட்வோர்க்கிங்கா பண்ணும்னு சொல்லிட்டு சில முயற்சிகள் கூட எடுத்தோம். ஆனால் காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைக்க வில்லை.

ஒரு முறை நான் அவரிடம், என்னங்க ஐயா சிலபேர் எல்லாம் 10 சென்டுல இயற்கை விவசாயம் செஞ்சா அதையே போஸ்டர் அடிச்சு ஊரு முழுசா காட்டுறான் நீங்க இவ்வளவு வேலை செஞ்சுட்டு எந்த பத்திரிகைகளையும் இல்ல எந்த ஒரு பொது மேடைகளிலும் கலந்து கொள்வதில்லை அப்படின்னு கேட்டதற்கு அதற்கு அவர் சொன்னார் “நான் நம்மாழ்வார் கூட ஊர் ஊரா வீதி வீதியா சுத்தி இந்த மாதிரி செயற்கை விவசாயம் கெடுதல்ன்னு பேசிட்டு திரிஞ்சோம் ஆனா விவசாயிங்களுக்கு முழு இயற்கை விவசாயம் செய்கின்ற மாதிரி ஏற்ற மாதிரி பண்ணைகள் இல்ல அதனால நான் நம்மாழ்வார் கிட்ட இப்படி பேசிக்கிட்டே இருந்தா இது சாத்தியப்படாது நான் தனியா போய் முதல என் தோட்டத்த நான் வடிவமைப்பு பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு வெளியே வந்து ஆரம்பிச்சது தான் “இந்த உழவாண்மை பண்ணை வடிவமைப்பு” என்றார்.

இவர் பண்ணை வடிவமைப்பில் முக்கியமான ஒரு செயலா நான் பார்க்கிறது JCB மூலம் குழிகள் எடுத்து அதற்குள் செடிகளை வளர்ப்பது. இந்த Trench எடுப்பதின் மூலம் மழைநீரை எளிதாக அருவடை செய்ய முடியும். இதைப்போல அந்த அந்த நிலங்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைப்பும் மாறும்.

“இன்னும் கொஞ்சம் உடம்பு நல்லா ஆயிடுச்சின்னா போதும், ஒரு சேர் போட்டுட்டு இந்த செடிய அங்க வை, அந்த செடிய இங்க வை அப்படின்னு சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவேன்.
மனசுக்கு புடிச்ச வேலைய செய்யனும் அதே சமயம் கொஞ்சம் நம்ம அறிவ பயன் படுத்தி அதுல இருந்து பணத்த வர வைக்குற வேலையையும் பார்க்கனும் ஹரி”.
இதுதான் நான் அவர கடைசியா சந்திச்ச போது எனக்கு அவர் சொன்னது. இதுதான எதார்த்த உண்மை!.

கடந்த இரண்டு வருஷ காலமா இவர் கூடவே நிறைய வாரங்கள் ஒன்னா தங்கி வேலை பண்ணி இருக்கேன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செஞ்சது தெல்லாம் ஒரு அழியாத ஞாபகமா எப்பவுமே எனக்குள்ளே இருக்கும்.

என் வாழ்க்கையில இயற்கை பற்றி எதோ கொஞ்சம் புரிதல் எனக்கு இருக்குன்னா அது உங்க அனுபவத்தை என்கிட்ட பகிர்ந்து கொண்டது தான் காரணம்.

நன்றி ஐயா

by  Haree Karthick 

Jv Jagadeesh முற்றிலும் உண்மை , தான் சார்ந்த மண்ணிற்கு மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து , வாழ்நாள் கடைசி வரை தடம் மாறாமல் பயனித்தவர். அவருடைய கண்காணிப்பில் ஏற்பாடான பண்ணையங்களை விலாசப்படுத்துங்கள், மற்ற பண்ணையாளர்களுக்கும் பயன்படும் . இந்த விவரங்கள் உங்களுக்கு மட்டுமே தெரியும் . இவரால் பலனடைந்தவர்கள் இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவாறு ஊரடங்கு காலம் , துயரத்திலும் ஒரு சந்தோசம் , படுக்கையில் நீண்ட காலம் இருக்காமல் விரைவில் விடை பெற்றமைக்கு, ஆன்மா கண்டிப்பாக சாந்தியடையும், தன்னலம் கருதாத வெளிச்சத்திற்கு வராமல் இருந்த மாமனிதர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.