பயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து

பயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து 

முருங்கை இலை பயிர்களுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து: முருங்கை இலை சாற்றை இலை வழி, வேர்கள் வழி் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம்.

முருங்கை இலையில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது என அறிவோம்.

இதை ஏன் செடிகளுக்கு கொடுத்து நுண்ணூட்டச்சத்துகள் குறைபாட்டை சரி செய்ய கூடாது என எண்ணியவர்கள் முருங்கை இலை சாற்றை இலை வழியாகவும், வேர்கள் வழியாகவும் கொடுத்து இது சிறப்பாக செயல் புரிகிறது என சொல்கிறார்கள்.

இதை காய்கறிகள் செடிகளுக்கு மேல் தெளிப்பு செய்யலாம்…

1. முருங்கை இலையை நேரடியாக அரைத்து சாறு எடுத்து நேரடியாக வேர் பகுதியில் உற்றுவது, அல்லது 1லிட்டர் நீரில் 30 ml அளவுக்கு கலந்து மேல் தெளிப்புக்கு பயன்படுத்துவது.

2. முருங்கை இலையை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் அளவுக்கு உப்பும் ,ஒரு கிராம் புளியும் சேர்த்து முருங்கை இலை மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து 10 நாட்கள் ஊற விட்டு பின் இலைகளை பிழிந்தெடுத்து மேலே சொன்ன விகிதத்தில் மேல் தெளிப்பது.

3. இலையை மீனோ அமிலம் தயாரிக்கும் முறையில் ஒரு லேயர் கீரை, ஒரு லேயர் நாட்டுச் சக்கரை என தயாரித்து 31 நாட்கள் நொதிக்க விடவேண்டும். இது மீனோ அமிலத்தை விடவும் சிறப்பாக வேலை செய்கிறது என சொல்கிறார்கள்.

முயற்சி செய்து பாருங்கள். பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கை விவசாயத்தில் செலவுகளை குறைப்பதும் அதன் வெற்றியே.

வாழ்த்துகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *