பயிர் சுழற்சி Crop rotation
Download:
http://agriwiki.in/pdf/Crop_Rotation_on_Organic_Farms.pdf
தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் சாகுபடி செய்யும்போது சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதை நிவர்த்தி செய்யத்தான் பயிற்சுழற்சி முறையை பின்பற்றுகிறோம்.
வேலை ஆள் பற்றாக்குறையினால் வாழை மட்டுமே பயிர் செய்கின்றோம் என்றால் பயிறு வகை பயிறு விதைத்து மடக்கி உழுது வாழை பயிரிடலாம்.
தொடரந்து ஒரே பயிர் சாகுபடி செய்யும்போது நோய் தாக்குதல் அதிகம் இருக்கும் அதனால் தான் பயர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். இது எனது அனுபவம் நன்றி.
ஒரு பயிர் சாகுபடிக்கு பின், நிலத்தில் தழை சத்துகளை அதிகரிக்கும் பயிர்களை சாகுபடி செய்யும் போது நிலம் அடுத்த பயிருக்கு தயார் ஆகிறது.
பயிர் சுழற்சி (Crop rotation) பழங்காலம் தொட்டு நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த ஓர் அறிவியல் முறை. இதன் மூலம் மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், மனிதனுக்கும் பல விதமான பருவங்களுக்கு ஏற்ற பயிற்களும், அது சார்ந்த விதைகளும் கையில் இருப்பிருந்தன!
இதைவிடுத்து ஒரே வகையான பயிர் (Mono cropping) செய்ததின் வினையே பல பூச்சி தாக்குதலின் காரணம். முக்கியமாக அப்பூச்சிகள் பல மருந்துகளுக்கு (விசங்களுக்கு என்று படித்தால் அதன் தாக்கம் இன்னும் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கும்!) கட்டுப்படாமல் உள்ளது.
ஆனால் அவ்விசத்தன்மை மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும் அதன் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது (புற்று நோய் இன்னும் பல….).
பயிர் சுழற்சியில் தானியங்களின் பங்கு இன்றியமையாது. இது மண்ணிற்கு தேவையான நைட்ரஜனை தன்னிடம் உள்ள வேர் முடிச்சுகளின் மூலம் வளிமண்டலத்தில் இருந்து தக்க வைப்பதனால், அடுத்து செய்யப்படும் பயிருக்கு நல்ல வளர்ச்சியை தர வல்லது!
எனவே பயிர் சுழற்சி என்பது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று