பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு

Agriwiki.in- Learn Share Collaborate

கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல கையறு நிலையில் அமர்ந்திருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள வடக்கிந்தியர்களுக்கு, ஏன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள என் நண்பனுக்கே எதுவும் தெரியவில்லை. அவரவர் வேலையாக உள்ளார்கள்.

பதிவுகளை, புகைப்படங்களை ஊன்றி பார்த்தால் ஓருண்மை புலப்படுகிறது.

அ) தரமில்லாத, ஆழ்ந்த நங்கூரமில்லாத கட்டுமானங்கள். அஸ்திவாரம் பலமில்லை. மட்டமான சிமெண்ட் கலவைகள். மெல்லிய பைப்புகள், தரமில்லாத ஆங்கிள் பட்டிகள், தகரங்கள், ஸ்குரூ. அவற்றை அவசர அவசரமாக கை எந்திரம் கொண்டு முடுக்கும் வேலையாட்கள்.

ஆ) தென்னையின் வேர்கள் ஆழமாக பதியவில்லை. அந்தமான் தீவுகளில் அடிக்காத புயலா !. அங்கே மணல் பகுதியில், உப்பு காற்றில் கூட தென்னை நிலைத்து இருக்கிறதே. தென்னை என்றாலே புயலை தாங்கும் என்றுதான் பெயர். ஆனால் புதிய வணிக ரகங்கள் விரைவாக வளருகின்றன. ஆழமாக வேர் விடுவதில்லை. ரசாயன உரங்களை தண்ணீரில் கரைத்து கொடுக்கிறார்கள். அதோடுகூட மோனோ குரோட்டப்பாசையும்.

இ) அதேபோல நிலத்தடி நீர் அர்த்தமற்றதாகிவிட்டதால். அடிமண் இறுகி இருக்கும். (என் ஊகம்). தென்னைகளை சொட்டுநீர் போல மேலாக பாய்ச்சி வளர்த்துள்ளதால், வேர்கள் ஆழமாக போகவில்லை. தண்டுகளும் அடர்த்தி குறைந்தும், வலுவிழந்து உள்ளன. ரசாயன உரங்கள் அதன் பங்குக்கு வலுவில்லாமல் வளர வேலை செய்திருக்கின்றன.

ஈ) காரைக்கால், வேதாரண்யம் போன்ற ஊர்கள் புயலுக்கு அஞ்சியவை கிடையாது. எத்தனையோ ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கரையை கடக்கும் வழியில்தான் இந்த புயலும் வந்திருக்கிறது. மக்கள் தயாராக இல்லை. பிள்ளைகளுக்கு இதை கல்வியாக போதிக்கவேண்டிய அவசியம் உள்ளது.

உ) அமெரிக்காவில், கலிபோர்னியா காட்டுத்தீயால் 80 மாண்டும் 1200 பேர் அரசு கணக்குப்படி காணாமல் போயும் (இறந்தும்) உள்ளனர். இயற்கையின் சீற்றத்தின் முன் வல்லரசு, நல்லரசு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. கடைசியில் தற்காப்பு ஒன்றுதான் வழி.

ஊ) தோட்டம் முழுவதும் அழிந்த சிறு குறு விவசாயிகளுக்கு வேறு தொழில் ஒன்றும் தெரியாது. பல ஆண்டுகளாக ஒரே முந்திரி பயிரை நம்பி விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர் போன்ற ஊர்களில் இருந்துள்ளார்கள். சென்றமுறை (2011) “தானே” புயலால் மரங்கள் முற்றிலும் அவை முறிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது . இந்த முறை கஜா புயல், அதேபோல தென்னையை மட்டும் ஏக்கர் கணக்கில் நம்பி இருந்தவர்களை சேதப்படுத்தியுள்ளது. பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு.

மௌனமாக நாம்.
By: Alwar Narayanan

Nandhini Rajesh தானே புயலின் போது பலா மரங்களும் சேதமாயின. அதன் பிறகு இரண்டு வருடங்கள் பலா சீசனில் கேரளத்தில் இருந்து வந்த பலா மட்டுமே. புதுவையில் பாரதி பூங்காவில் இருந்த பல பெரிய மரங்கள் வீழ்ந்தன. அதிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும்ம் கூட அதன் வடு இன்னும் ஆரவில்லை

Kandasamy Thandampalam கவனம் செலுத்தினால் தவிர்த்து விடலாம்,முதலில் வானிலை மையத்தில் மாங்காமடையன்களை நீக்கிவிட்டு பலநாட்கள் முன்பே  செல்வகுமார் போன்றவர்களை அமர்த்தவேண்டும்,பிறகு மரங்களின் கிளைகளை கவாத்து செய்துவிடவேண்டும்,தென்னை ஓலைகளை முழுவதுமாக குருத்தை மட்டும் விட்டு விட்டு வெட்டி நீக்கிவிடவேண்டும்.ஓடுகளை திட்டமிட்டு குறிப்பிட்ட அளவு நீக்கி வைத்துவிட்டால் போதும்,மாடு கன்றுகளை காலி மைதானத்தில் பட்டி போட்டு ஓட்டிவிடவேண்டும் இப்படி செய்தால் பெரும் சேதங்களை தவிர்கலாம் அரசு மக்களை ஒருங்கினைத்து செய்தால் இது சாத்தியமே

Tamilselvam Arumugam சகோதரரே,தென்னைக்கு
அதிகம் கவாத்து செய்ய
கூடாது. ஏனெனில் மட்டை
தான் அதற்கு பலம்.
அதுவே பனை மரத்திற்கு
கவாத்து செய்யலாம்.
பனைமரத்தின் அமைப்பு
அப்படி.

Kandasamy Thandampalam Tamilselvam Arumugamதென்னை மட்டைகளை வெட்டிவிட வேண்டும்,பனையைபோல் அடியுடன் உரிப்பதல்ல,அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது,மீண்டும் ஒருவருடத்தில் பழைய நிலைக்கு வந்துவிடும்,சில சமயங்களில் வறட்சி காலங்களில் அவ்வாறு செய்தால் நான்கு மாதங்கள் நீரின்றி மரம் உயிர்வாழும்,காய்ப்பு மட்டுமே நமக்கு இழப்பு,தென்னை மட்டுமே நான் சாகுபடி செய்துள்ளேன்,எனக்கு தென்னையை பற்றி நவீன தொழில் நுட்பங்கள் நன்கு தெறியும், மரம் ஒடிந்துவிட்டால் வேலைக்கு ஆகாது ஆனால் தென்னை மட்டையில் ஓலையுள்ள பகுதியை மட்டும் வெட்டி நீக்கினால் மரம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்