பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்

கட்டிடக்கலையில் பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன் 
Agriwiki.in- Learn Share Collaborate

கட்டிடக்கலையில் பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன் 

ஆயிரம் ஆண்டு முன்பே மெட்ராஸ் டெர்ரஸ் தமிழர்களின் கட்டிட அமைப்பு

 

இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ்

மெட்ராஸ் டெர்ரஸ் அமைக்கும் முறை

இதனை அமைக்கும் முறை – தேக்கு மரங்களைக் குறுக்கே போட்டு அதன் மேல் மூங்கில் பரப்பி செம்மண் கலவை போட்டுவிடுவார்கள் இம்முறை ஆங்கிலேயர் காலத்தில் தான் நமக்கு அறிமுகம் ஆனது. இதனைத் தான் ‘மெட்ராஸ் டெர்ரஸ்’ என்று சொல்லி வருகிறார்கள்.

 

தஞ்சை பெரியகோயில் கேரளாந்தகன் திருவாயில்

உண்மையில் இது நமது முன்னேர்களின் கட்டுமானத்திறன். தமிழகத்தில் விளங்கிய கோபுரங்களில் முதலாவதும், மிகப்பெரியதுமான கோபுரமாக திகழ்வது தஞ்சை பெரியகோயில் கேரளாந்தகன் திருவாயிலே ஆகும். பின்னாளில் எழுநிலை, ஒன்பது நிலை, பதினொரு நிலை, பதின்மூன்று நிலைக் கோபுரங்கள் எடுக்கப்படுவதற்கு அடிப்படையாய் விளங்கியதும் இக்கோபுரமே ஆகும்.

பலகணிகள் கீழ்தளத்தில் பித்தியல் நான்கு பக்கத்தில் மொத்தம் 12 பலகணிகள் உள்ளன. இவை ஒவ்வொரு தளத்தின் உட்புறமும் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் ஆகியவை வேண்டி அமைக்க பெற்றவை ஆகும். இந்த அளவு மிகுதியான பலகணிகள் உள்ள கோபுரம் தமிழகத்தில் இதுவே.

முன்னேடியான தளஅமைப்பு ஒவ்வொரு தளத்தின் உட்புறம் சுவரில் பிதுக்கம் கொடுத்து சாளரம் எனும் துவாரம் அமைத்து அதில் திராவி எனும் உத்திரங்களை நெருக்கமாக பதித்து அவற்றின் மேல் பலகைகளை தைத்து செங்கற்களைக் குத்து வாட்டில் சுண்ணாம்புச் சாந்து கொண்டு இணைத்து தளம் அமைத்து உள்ளார்கள்.


இவ்வகை அமைப்பை கிபி1600க்கு பின்பு மேலைநாட்டு கட்டட பொறியியல் அமைப்பு என்றும், அவர்களால் இது தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கபட்டது என்றும் கூறிக்கொண்டு மீண்டும் நமக்கே ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் ஆயிரம் ஆண்டு முன்பே இது தமிழர்களின் கட்டிட அமைப்பு, இத்தொழில்நுட்பம் நமக்கு புதிது இல்லை