பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்

பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்
பார்த்தீனிய விஷ செடிக்கு நச்சு கொல்லி தெளிக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இந்த புகைபடத்தை பார்த்தால் புரியும்..
நச்சு தெளிச்சதால தாய் செடி காய்ந்திருக்கு..
ஆனா காய்ந்த செடிக்கு கீழே பாருங்க
எத்தனை பார்த்தீனீய நாற்று முளைத்து வந்திருக்குனு..!
அப்போ நச்சு கொல்லியால விதை வீரியமடைந்து ஆரோக்கியமா வளர்வது தெரியுது..
இதைதான் ஆறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுள்ளோம்..
அப்போ இதற்கு தீர்வுதான் என்ன??
ஏற்கவே சொன்னது போல கல் உப்பு கரைசல்தான்ங்க..
பத்து லிட்டர் தண்ணீரில்
ஐந்து கிலோ கல் உப்பு (சாப்பாட்டு உப்பு) கரைத்து பூத்த பால்த்தீனீய செடி மேல நன்கு படும்படி தெளிச்சு பாருங்க..
ஒரு சில மணி நேரத்திலேயே தாய்செடி காய்ந்துவிடும்..
அடுத்த ஒரு வாரம் விட்டு பாருங்க,
காய்ந்த செடிக்கு கீழே ஒரு விதை கூட முளைக்காது..
இதுதான் இயற்கையான தீர்வு..
இது வரப்பு,தென்னை தோப்பு, வாழை காடு,இப்படியான பயிர்களுக்கு இடையிலும் தெளிக்கலாம்..
வெங்காயம், மிளகா செடி இன்னும் வேறு பயில்களுக்குள்ளே தெளிக்கவேண்டாம்..
காரணம் பயிர்கள் மீது உப்பு தண்ணி பட்டால் காய வாய்ப்பு இருக்கு..
அதற்கு நடவுக்கு முன்பே பார்த்தீனியாவை நன்கு முளைக்க வச்சு உப்பு தண்ணி தெளிச்சு அதன் பிறகு உழவு ஓட்டி மேற்சொன்ன பயிர் நடவுங்க..
பாதிக்காது..
ஏங்க இத்தனை கஷ்டத்திற்கு பர்த்தீனீயாவை பிடிங்கி உரமாக்கிடலாம்னு யாரும் சொல்ல வராதீங்க..
காரணம்,
பார்த்தீனீய பூ பூத்து கிடக்கிற காட்டு பக்கம் போனாலே தொடர்ச்சியா தும்மல் வருவதும்,
கையில் செடிபட்டாலே கொப்பலங்கள் வருவதும்
எனக்கு உட்பட நிறையா பேருக்கு இருக்கு..
அதனால இந்த விஷ செடியை வைத்து
விஷ பரீட்சை வேண்டாம்..!!
மண்ணுக்கு உரம போட வேறு நிறையா செடிகள் இருக்கு..
அதை பிடுங்கி போடுங்க..!
சரி உப்பு தண்ணி தெளிச்சா மண் மலடாகாதானு சந்தேகம் வரும்..
மலடாகும்..
தொடர்ந்து தெளித்தால்..
வருடதிற்கு இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் ஒன்னும் பிரச்சனையில்லைங்க..
அதும் போக இது போல தெளித்தாலே பார்த்தீனீயா படிப்படியா கட்டுபடுகிறது..
அதனால தொடர்ந்து தெளிக்கனும்னு அவசியமில்லை..
அப்போ அருகு,கோரைக்கு என்ன வழினு கேட்ப்பீங்க..
அதற்கு மூடாக்கு ஒன்றே தீர்வு..
மூடாக்கு போட இலை, தழை கிடைக்கலைனா உயிர் மூடாக்கான நரிப்பயறு போன்ற பயிரை விதைச்சு
கட்டுபடுத்துங்க..
வேறு வழியில்ல..
நன்றி..
சத்தியமங்கலம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *