புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை – இயற்கை பூச்சி விரட்டி
ஆடு திங்காத கசப்பு அதிகம் உள்ள 10 வகையான இலை, தழைகளை 3கிலோ எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டிரம்மில் போட்டு இலை முழுகும் அளவு கோமியம் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும்.
3 நாளில் தயாராகிவிடும், ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.
10 லிட்டர் தண்ணீருக்கு பூச்சிவிரட்டி – 100 மில்லி + சுத்தமான வேப்பெண்ணை – 20 மில்லி + மெட்டாரைசியம் – 100மில்லி + பெவேரியா பேசியானா – 100 மில்லி.
இதனுடன் ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி 100 மில்லி ( 100 கிராம் அரிசி மாவு + 1லிட்டர் தண்ணீர் கலந்து காய்ச்சி தயாரித்து கொள்ளவும்.
சேர்த்து நன்றாக கலந்து புழுக்களின் மீது நன்கு படும்படி காலை 7 – 9 மணிக்குள் அல்லது மாலை 4 – 6 மணிக்கு தெளித்து விடவேண்டும்
மழை பெய்யும் போல இருந்தால் காலையில் தெளிப்பது சரியாக இருக்கும். தெளித்த பிறகு 3 மணி நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும்.
தெளித்த 7 வது நாளில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
10 நாட்களில் புழுக்கள் இறந்துவிடும்.
செயல்படும் முறை:
இதிலுள்ள நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் புழுக்களுக்கு உள்ளே சென்று புழுவின் ரத்தத்தை உணவாக உண்டு புழுக்களை அழித்துவிடும்.
பூச்சிவிரட்டியும், வேப்பெண்ணையும் புழுக்களை இலை தழைகளை உண்ண விடாமல் செய்து பூஞ்சாணங்களின் வேலையை சுலபமாக்கிவிடும்.
வேப்பெண்ணைக்கு பதிலாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்துவது சிறந்தது.