பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்
அ) ஜீவாமிர்தம் தெளிப்பு
100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி ஊடகம் என்றாலும், அது சிறந்த பூஞ்சான கொல்லியும் ஆகும். சிறந்த கிருமி நாசினி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்தும், மேலும் வளர்ச்சிக்கான நொதிகளையும் கொடுக்கிறது, இதனால் இலைப்பரப்பு பெரிதாகிறது, ஜீவாமிர்தத் தெளிப்பு புறஊதாக் கதிர்களிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது,
ஆ) புளித்த மோர் கரைசல்
8 முதல் 10 நாட்கள் ஆன புளித்த 2.5 லிட்டர் புளித்த மோரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மோர் சிறந்த பூஞ்சைக் கொல்லி, பாக்டீரியா கொல்லி இதில் நொதிகள் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளது.
இ) சுக்கு அஸ்திரம்
2 லிட்ர் தண்ணீரீல் 200 கிராம் சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும் கரைசலை தட்டால மூடி மிதமான நெருப்பில் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்
மற்றொரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் பசும்பால் எடுத்துக்கொண்டு மிதமான நெருப்பில் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். குளிர்ந்த பின்னர் பால் ஏடை எடுத்துவிட்டு அதில் 200 லிட்டர் தண்ணீரையும் சுக்குத் தண்ணீரையும் சேர்த்து கலக்கவும் 2 மணிநேரம் கழித்து துணியால் வடிகட்டி தண்ணீர் சேர்க்க்மல் அன்றே தெளித்திடுங்கள்.
ஈ) சர்வரோக நிவாரணி
200 லிட்டர் தண்ணீர்
15 முதல் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம்
5 லிட்டர் புளித்த மோர்
சேர்த்து கலக்கி வடிகட்டி தெளிக்கவும்
தெளிப்பு கால அட்டவணை:
மாதுளை மற்றும் திராட்சை போன்ற பயிர்களுக்கு அமாவாசை மற்றும் பொளர்ணமிடிய பூச்சி விரட்டிகள் தெளிக்கவும். அஷ்டமி நாட்களில் ஜீவாமிர்தம் தெளிக்கவும்.
ஜீவாமிர்தம் இரண்டு முறை தெளிக்கும் போது சதுர்தசி, துவாதசி நாட்களில் தெளிக்கவும்.
நாம் சுபாஷ் பாலேக்கர் விவசாயம் பின்பற்றினால் எந்த தெளிப்பும் தேவையில்லை.
*சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி*
*ஈஷா விவசாய இயக்கம் – 8300093777*
*07.02.2019 / Noon*