பேரூட்டங்களின் மூலம் எது

பேரூட்டங்களின் மூலம் எது - ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம்

பேரூட்டங்களின் மூலம் எது?
அவற்றை நாம் கடையில் இருந்து ஏன் வாங்கவேண்டும்

பாஸ்பேட்

பாஸ்பேட் மூன்று வடிவங்களில் உள்ளது.

  1. ஒரு துகள் பாஸ்பேட் (ஒற்றைப் பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்),
  2. இரட்டை துகள் பாஸ்பேட் (இரட்டை பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்),
  3. மூன்று துகள் பாஸ்பேட் (முப்பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்)

தாவர வேருக்கு ஒரு துகள் பாஸ்பேட் மட்டுமே தேவைப்படுகிறது. இது இரண்டு மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்களை எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு துகள் பாஸ்பேட் மண்ணில் இருப்பதில்லை. ஆனால் இரண்டைத் துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட் மண்ணில் இருக்கிறது, அப்படியானால் நாம் ஒரு துகள் பாஸ்பேட்டை தாவரத்திற்கு கிடைக்கூடிய நிலையிலும் மற்ற இரண்டும் கிடைக்காத நிலையிலும் உள்ளது.

மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது.

வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது.

வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது,

இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்?

இதை செய்வது ஒரு பாக்டீரியா ஆகும்.

அது பாஸ்பேட் கரைக்கும் பேக்டீரியாவாகும். (PSP / Phosphate solubilising bacteria)

இயற்கை வேர்களுக்கு பாஸ்பேட்டை வழங்கும் பணியை இந்த பாக்டீரியாவிற்கு மட்டுமே கொடுத்துள்ளது, இந்த பாக்டீரியாக்கள் தொழில் சாலையில் உற்பத்தி செய்ய முடியாது, செல் பிரிந்து பெருகினாலும் உண்மையில் உற்பத்தியாவதில்லை.

இயற்கை உருவாக்கிய ஒரு தொழில்சாலை உள்ளது அது நாட்டுமாட்டுப் பசுவின் குடல் ஆகும். நாட்டு பசுஞ்சாணம் இந்த பாக்டீரியாவைக் கொண்டுள்ளது. நாம் கனஜீவாமிர்தம் மற்றும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் போது இவை பல்கி பெருகுகின்றன,

இந்த இடுபொருட்களை நாம் மண்ணில் பயன்படுத்தும் போது மண்ணில் பெருமளவு பாக்டீரியாக்கள் பெருகுகிறது,

இந்த பேக்டீரியாக்கள் இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை உடைத்து ஒரு துகள் பாஸ்பேட்டாக மாற்றி. பயிருக்குத் தேவையான பாஸ்பேட் கிடைக்கிறது.

நாம் பாஸ்பேட் இரசாயன உரங்களை நிறுத்த வேண்டும் என்றால் நமக்கு உள் ஒரே தீர்வு ஜீவாமிர்தம் மற்றும் கனஜிவாமிர்தம் மட்டுமே ஆகும்.

நாம் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் பாயன்படுத்தும்போது இயற்கையாகவே தாவரத்திற்கு பாஸ்பேட் சத்து கிடைப்பதால் நாம் பாஸ்பேட் இரசாயன உரங்கள் பயன்படுதுவதை தவிர்க்க முடியும்.

பொட்டாஷ்

மண்ணில் பொட்டாஷ் பெருமளவு இருக்கிறது, அந்த பொட்டாஷ் பல துகள் திரட்டாக உள்ளது. இது சிலிகேட் கொலாய்டு எனப்படுகிறது, (silicate colloids).

இந்த பல துகள் பொட்டாஷை தாவரங்களால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை, வேர்களுக்கு ஒரு துகள் வடிவில் பொட்டாஷ் தேவை. இது மண்ணில் நேரடியாக இல்லை. ஆனால் மண் மாதிரிகளை சோதிக்கும் போது பொட்டாஷ் நிறைய உள்ளதாக முடிவுகள் சொல்லும். ஆனால் அவை கிடைக்கப் பெறாத வடிவில் இருக்கிறது. அதாவது பல துகள் பொட்டாஷ் வடிவில் இருக்கிறது.

நாம் வனத்தில் உள்ள ஒரு தாவரத்தில் இலையை எடுத்துக் ஆய்வகத்தில் ஆய்வு செய்யும் போது ஆய்வுமுடிவு பொட்டாஷ் இருப்பதாக கூறுகிறது. அப்படியானால் பொட்டாஷ் தாவரத்திற்கு கிடைக்கிறது,

எப்படி சாத்தியமானது, வேர் பகுதியில் பொட்டாஷ் வழங்கும் ஒருவர் இருக்கிறார். இவர் பல துகள் பொட்டாஷை ஒரு துகள் பொட்டாஷாக பிரிக்கிறார், அவற்றை வேர்களுக்கு கொடுக்கிறார்,

அவர் யார்?

இது ஒரு பாக்டீரியா ஆகும், இதன் பெயர் பேசில்லஸ் சிலிக்கஸ் ஆகும்.

இந்த பாசில்லஸ் சிலிக்கஸ் பேக்டீரியாவிலும் தொழில் சாலையில் உற்பத்தி செய்ய இயலாது ஆய்வகத்தில் செல் பிரிந்து பெருக மட்டும் செய்யும் ஆனால் உற்பத்தி ஆகாது.

இயற்கை உருவாக்கிய தொழிற்சாலை ஒன்று உள்ளது அது நாட்டுபசு மாட்டின் குடலாகும்.

நாம் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தம் தயாரித்து  மண்ணில் இடும் போது இந்த பேசில்லஸ் சிலிக்கஸ் பேக்டீரியா மண்ணில் நுழைகிறது. இது பல துகள் பொட்டாஷை ஒற்றைத் துகள் பொட்டாஷாக பிரித்து வேர்களுக்கு கொடுக்கிறது.

நாம் பொட்டாஷ் உரங்கள் பயன்பாட்டை பொட்டாஷியம் சல்பேட், மியூரேட் ஆப் பொட்டாஷ் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றால் ஒரே தீர்வு ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவார்தம் பயன்படுத்துவதுதான்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் நைட்ரஜன் பாஸ்பேட் பொட்டாஷ் குறைபாடுகள் இல்லை. ஏனெனில் நாம் இரண்டு பொருட்கள் பயன்படுத்துகிறோம். ஒன்று ஊடுபயிர்கள் மற்றொன்று நாட்டுமாட்டு இடுபொருட்கள்.

தயோல் ஆக்சிடண்ட் (thiol oxidant) பேக்டீரியா வேர்களுக்கு கந்தகம் கொடுக்கிறது, பெர்ரஸ் பேக்டீரியா வேர்களுக்கு இரும்பு சத்துக் கொடுக்கிறது. மைக்கோரைசா பூஞ்சை வேர்களுக்கு அனைத்து ஊட்ட சத்துக்களையும் கொடுக்கிறது. இவை எல்லாம் கிடைக்கப் பெறாத வடிவில் இருந்து கிடைக்கும் வடிவிற்கு மாற்றப்படுகிறது.

இயற்கை எண்ணற்ற நன்மை செய்யும் பேக்டீரியாக்களை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் ஜீவாமிர்தம் மற்றும் கனஜீவாமிர்தத்தில் உள்ளது. டிரைகோடெர்மாவும் ஜீவாமிர்தத்தில் உள்ளது கடையில் இருந்து வாங்க வேண்டியதில்லை.

அடையாளம் காணப்பட்ட மற்றும் அடையாளம் காணப்படாத நன்மை செய்யும் எண்ணில் அடங்கா நுண்ணுயிர்கள் நாட்டு பசுமாட்டின் குடலில் உள்ளது.

உரங்கள் வேண்டாம், சாண உரம் வேண்டாம், மண்புழு உரம் வேண்டாம், பையோடைனமிக் உரம் வேண்டாம், குப்பை உரம் வேண்டாம், இ,எம் திறவம் வேண்டாம், வேஸ்ட் டி கம்போசர் வேண்டாம், அங்கக உரம் வேண்டாம், பஞ்ச வ்யம் வேண்டாம், தசகவ்யம் வேண்டாம், அக்னி ஹேத்ரம் வேண்டாம், மந்திரம் வேண்டாம், இரசாயன உரம் வேண்டாம், நுண் ஊட்டசத்துக்கள் வேண்டாம். திரவ உரங்கள் வேண்டாம், மீன் உரம் வேண்டாம், புண்ணாக்கு வேண்டாம், எதுவுமே வேண்டாம்.

ஏன் என்றால் எந்த உரமும் வேர்களுக்கு உணவில்லை.

எனவே எந்த உரமும் எருவும் நமக்கு வேண்டாம், மானியத்தில் கொடுத்தாலும் வேண்டாம். இதுதான் இயற்கையான வாழ்க்கைமுறை இதுதான், ஆன்மிகம் என்பது பூஜையும் வழிபாடும் ஆன்மிகம் இல்லை. இயற்கையைப் பின்பற்றுவதே உண்மையான ஆன்மீகம்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்