மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை

பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை

எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது.

பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சினையை சரி செய்ய இயற்கை முறையில் எளிமையான வழி உள்ளது.

தேவையான பொருட்கள்:

ஜாதிக்காய் 2 எண்ணிக்கை

விரலி மஞ்சள் 10 கிராம்

இந்த இரண்டு பொருளையும் நன்றாக பொடிசெய்து கொள்ளவும்.

பசு மற்றும் எருமை பால் கறக்க ஒரு மணி நேரத்திற்கு முன் அடர் தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ “ஜாதிக்காய் விரலி மஞ்சள் “கலந்த பொடியை

பசுவிற்கு 1/2 ஸ்பூன்

எருமைக்கு 1 ஸ்பூன்

என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பால் கறக்கும் போது பசு மற்றும் எருமை அமைதியாக இருக்கும்.

நன்றி
அசோலா சதீஷ் குமார்
திருவண்ணாமலை