மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்

மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்

மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்

மூடாக்கு
இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10 நாட்களில் பெரிய மண்புழுக்களை பார்க்க முடியும். நிலத்தில் மண்புழுவே இல்லை என்றாலும் 10 நாளில் மண்புழு வந்துவிடும். ஜீவாமிர்தம் மண்புழுவை அழைக்கும்.

*மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்*

சாதகமற்ற சூழ்நிலைகள் இருக்கும்போது மண்புழுக்கள் செயல்பட முடியாது. அதன் பணியை செய்யாமல் ஈரமிருக்கும் ஆழமான மண்ணில் சென்று அல்லது வயலின் வரப்பிற்கு சென்று செயலற்ற நிலையில் இருக்கின்றன.

அவை சாதகமான சூழ்நிலைகள் கிடைக்கும் போது செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்து வேலை செய்யத் துவங்குகின்றன. இந்த சாதகமான சூழலுக்கு நுண்சூழல் என்ற பெயரைக் கொடுத்துள்ளோம். இந்த மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் செயல்படுவதற்கு நுண்சூழலை உருவாக்குவது அவசியமாகிறது. நாம் மண்ணின் மேல் மூடாக்கு போடும் போது இயல்பாகவே நுண்சூழல் உருவாகிறது.

அப்படியானால் நாட்டுமண்புழுக்கள் உச்சநிலையில் செயல்பட 2 விஷயங்கள் அவசியம். மண்ணை மூடாக்குக் கொண்டு மூடவேண்டும், இதன் மூலம் நுண்சூழல்(micro climate) உருவாக முடியும். நாம் நாட்டு மண்புழுக்களை வரவழைப்பதற்கு ஜீவாமிர்தம் கனஜீவாமிர்தம் இடவேண்டும். ஜீவாமிர்தம் கொடுத்தும் மண்ணில் மூடாக்கு போடவிலை என்றால் நாட்டு மண்புழுக்கள் செயல்படத் துவங்காது. எனவே இரண்டும் அவசியம். ஜீவாமிர்தம் மற்றும் மூடாக்கு இரண்டும் வேண்டும். மூடாக்கு பூமித்தாயின் சேலையாகும், தாவரக் கழிவுகளை எரிப்பவர்கள் துர்ச்சாதனர்கள் ஆவார்கள், பயிரின் மேல் மூடாக்கு போடுபவர்கள் கிருஷ்ணர்கள்.
மூடாக்கு நுண்சூழலை உருவாக்குகிறது. அதன் மூலம் நாட்டு மண்புழுக்கள் செயல்படத் துவங்கும்.

மூடாக்கு மக்காகிறது, இதுவே ஊட்டச்த்துக்களின் மூலமாகும், இது நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் பாதுகாக்கிறது அவற்றின் எதிரிகளான கடும் வெப்பக்காற்று, கடும் குளிர், அதிக மழை, பறவைகள், பூச்சிகள், பன்றிகள் மற்றும் எதிரிகளின் கண்களில் இருந்து மூடாக்கு பாதுகாக்கிறது.

அதோடு மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. நீராவியாவதன் மூலம் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
மூடாக்கு இரண்டு விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது. வேர்களின் அருகில் அதிகமான ஈரப்பதம் இருக்கும் போது மூடாக்கு கூடுதல் ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றில் நீராவியாக வெளியேற்றுகிறது. இதனால் வேர் பகுதியில் காற்றோட்டம் உருவாகிறது.
மேலும் வறட்சி ஏற்பட்டால் வேர் பகுதில் இருக்கும் ஈரப்பதம் மூடாக்கு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி வேர் பகுதியின் அருகில் (மண்ணில்) சேர்க்கிறது.
மூடாக்கு கதிர்வீச்சிலிருந்தும் மண்ணை பாதுகாக்கும், வேகமாக காற்றிலிருந்தும் காக்கிறது.

மூன்று விதமான மூடாக்கு உள்ளது
1. மண்மூடாக்கு (அதாவது மண்ணை பண்படுத்துவது)
2. இலைதழை மூடாக்கு
3. உயிர் மூடாக்கு

மண் மூடாக்கு என்றால் மண்ணை உழுவதும் பண்படுத்துவதும் ஆகும், இதற்கான காரணங்கள்
1. மண்ணில் காற்றோட்டம் ஏற்படுத்துவதற்கு,
2. மழைநீரை மண்ணில் சேமித்து மண்ணின் ஈரப்பதத்தைக் காப்பதற்கு.
3. களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு

மண்ணின் மேல்பரப்பில் உள்ள 4.5 அங்குலம் மண் தாய்மண் ஆகும். இது உயிருள்ள மண். இதில் 88 முதல் 92 சதம் நுண்ணுயிர்கள் உள்ளன. 95 மூன்றம் நிலைவேர்கள், நுண்ணிய வேர்கள் இந்த பகுதியிலேயே உள்ளன இந்த இரண்டுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. மண்ணை நாம் உழும் போது மண்ணுடன் காற்றைக் கலக்கிறோம், இதனால் நுண்ணுயிர்களுக்கு ஆக்சிசஜன் கிடைக்கிறது.

காற்றில்லா சுவாசம் செய்யும் பாக்டீரியாக்களால் அழுகும் பொருட்களில் இருந்து அழுக வைக்கக் கூடியவை மண்ணை உழும் போது இவை வெளியிடும் கெட்ட வாயுக்கள் வெளிவருகின்றன.

அதிகவெப்பத்தால் மண்ணின் மேல் பிளவுகள் ஏற்படுகின்றன. இந்த வெடிப்புகள் வழியாக அதிக அளவிலான ஈரப்பதம் நீராவியாக காற்றில் கலக்கிறது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது மண்ணை உழுவதினால் வெடிப்பு நீக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

மண்ணிற்குள் அதிகபட்சமாக மழைநீரை சேர்ப்பதற்கு நாம் மண்ணை உழுகிறோம்.

மண்ணை நாம் உழும்போது களைகள் தன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மட்கு மேல் மண்ணில்தான் உருவாகிறது. மண் வளமாக வளமாக மண்ணின் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. ஏனென்றால் மட்குதான் மண்ணின் உயிர்தன்மையும் உற்பத்தி திறனும் ஆகும்.
எனவே 4.5 அங்குல மேல் மண் ஒரு சேமிப்பு வங்கியாகும். இந்த மண்ணை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் நாம் மண்ணை டிராக்டர் கொண்டு உழும் போது இந்த மேல் மண் மண்ணின் அடியில் சென்றுவிடுகிறது. அங்கு சரியான ஆக்சிஜன் இல்லை, ஆனால் அங்கு விஷவாயுக்கள் உள்ளன, அமோனியா, மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு உள்ளன எனவே நுண்ணுயிர்கள் இறந்துவிடுகின்றன, மட்கு அழிகிறது,

ட்ராக்டரின் எடையால் மண் அழுத்தப்படுகிறது. ஒரு சதுர அடி பரப்பு மண்ணிற்கு 32 கிலோவிற்கு அதிகமான எடையை தாங்கும் வலிமையில்லை.

டிராக்டர் மண்ணில் நகரும் போது கூடுதல் எடையால் மண் அழுத்தப்படுகிறது. மண் துகள்கள் ஒன்றாக சேர்கின்றன. அதன்விளைவாக இரசாயன உரத்தால் படிந்திருக்கும் உப்புக்கள் மண்ணின் மேலே வருகின்றன, இதனால் மண் உப்புத் தன்மை நிறைந்தாகிறது.

எனவே டிராக்டர் கொண்டு உழுவதை தவிர்த்திடுங்கள். இதனால் மண்ணில் அமைப்பு மாறிவிடுகிறது. டிராக்டர் கொண்டு உழவு செய்வது கட்டாயம் என்றால் கல்டிவேட்டர் அல்லது ரோட்டவேட்டர் பயன்படுத்துங்கள் அவற்றை வைத்து உழும்போது மேல் மண் மீண்டும் மேல் இடத்திற்கே திரும்பி வந்துவிடும். சிறந்த உழவு மரக்கலப்பையும் ஏரும்தான்.

சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்