மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு விதைத்தல் Sesbania_bispinosa

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு விதைத்தல்

முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்போ அல்லது பயிர் சாகுபடி செய்திருந்தால் அறுவடை முடிந்தவுடன் தக்கப்பூண்டு விதைக்கலாம்

தக்கப்பூண்டு விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பயிருக்கு தழைச்சத்து இயற்கையிலேயே கிடைக்கும்.

நூற்புழுவின் தாக்குதல் இருக்காது
மண்ணின் தன்மை மாறுபடும் மண்வளம் அதிகரிக்கும்
மண் இருக்கமில்லாமல் பொதுபொதுப்பாக இருக்கும்
மண்ணின் கார நிலை குறையும்

தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மை உடையது
பயிருக்கு வேர் வளர்ச்சி அதிகரிக்கும்
மகசூல் அதிகம் கிடைக்கும்
செலவு குறைவு

விதைப்பு செய்யும் முறை

பயிர் அறுவடை செய்த உடன் இரண்டு மூன்று மாதங்கள் நிலத்தை சும்மா போட்டு வைத்திருப்போம். அவ்வாறு சும்மா போடாமல் அந்த மூன்று மாதங்களில் ஒரு உழவு செய்தவுடன் தக்க பூண்டு விதைக்கலாம்

தக்கப்பூண்டு விதைப்பது இரண்டு முறையில் விதைக்கலாம்

50 நாளில் மடக்கி உழவு செய்வதாக இருந்தால் 10 கிலோ தக்கப்பூண்டு விதை தேவைப்படும்
40 நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும் என்றால் 15 கிலோ விதை தேவைப்படும்.

பயிர் அறுவடை முடிந்தவுடன் வயலை ஒரு உழவு ஓட்டி அதன்பிறகு தக்கபூண்டு விதையை விதைத்து திரும்ப ஒரு உழவு போடவேண்டும். விதை முளைக்க ஒரு தண்ணீர் பாய்ச்சலாம் அல்லது மழை பெய்தால் விதைத்து விடாலாம். விதை முளைத்து பூ பூக்கும் பொழுது ரொட்டாவேட்டர் விட்டு நன்றாக நொருக்கி விட வேண்டும்.

அவ்வாறு நொருக்கி விட்ட 15 நாட்களில் தக்கபூண்டு செடி நன்றாக மக்கிவிடும் அதன்பிறகு விவசாயம் செய்யலாம் மகசூல் கூடும்

Other Names: Daincha
Botanical Name: Sesbania aculeata OR Sesbania bispinosa