மண்வளம் பெருக பசுந்தாள் உரம்

Agriwiki.in- Learn Share Collaborate

மண்வளம் பெருக பசுந்தாள் உரம்:

மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம்.

அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும்.

நடப்பு சம்பா சாகுபடிக்கு ஒருசில இடங்களில் பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நாற்றுகள் விடப்பட்டு 20 முதல் 30 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன.

நாற்று விடப்பட்ட இடங்களை தவிர்த்து மீதமுள்ள சாகுபடி நிலப்பரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

பசுந்தாள் உரத்தில் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பிள்ளிபயிர் சிறந்தவையாகும்.
பயிர்வகை இனத்தை சேர்ந்த பசுந்தாள் உர பயிர்கள் காற்றில் உள்ள தழைசந்ததை கிரகித்து 70 சதவீதம் வரை வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒருபகுதியை மண்ணில் சேர்ப்பதால் நிலம் வளமடைகிறது. மண் அரிப்பை தடுத்து மேல் மண் இழப்பை தடுக்கிறது.

மண்ணுக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பிடிப்பு பயிராகவும், நிழற்பயிராகவும், மூடு பயிராகவும், தீவன பயிராகவும் பயன்படுகிறது.

மண்ணின் கரிம பொருட்களை அதிகரிக்க செய்கிறது.

பசுந்தாள் எருவானது பயிரின் பேரூட்ட சத்தான தழைசத்து மண்ணில் இருந்து நீர் மூலம் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.

நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பிறகு மண்ணில் உள்ள பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்கிறது.

எனவே அனைத்து விவசாயிகளும் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகியுள்ள நிலத்தில் சாகுபடி செய்து அதிகமகசூல் பெறலாம்.