மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி

மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி
Agriwiki.in- Learn Share Collaborate

*இன்று ஒரு தகவல்*

*மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி..!!*
மண் அரிப்பை தடுத்து மண் வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி..!!

🌱 சணப்பு பயிர் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர கூடியது.

🌱 சணப்பு விதைத்த, 45 நாள்களில் நன்கு வளர்ச்சியடையக் கூடியது.

🌱 சணப்பு பயிர் ஒரு ஊடுப்பயிராக வளர்க்கப்படுகிறது.

🌱 சணப்பு பயிர் எந்த பருவங்களிலும் விளையும் தன்மைக் கொண்டது.

🌱 பொதுவாக விதைக்காக சணப்பு சாகுபடி செய்யப்படுகிறது.

🌱 காற்றில் உள்ள தழைச்சத்தை, சணப்பு பயிர் தனது வேர் முடிச்சுகளில் உள்ள, நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் திறன் கொண்டது.

🌱 சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணின் ஆழத்துக்கு ஊடுருவி, மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது.

🌱 சணப்பு மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டதால், களைகள் ஏதும் வளராமல் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசு+ல் அதிகரிக்கச் செய்யும்.

🌱 நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பு+க்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால், காற்றிலுள்ள நைட்ரஜனை உறிஞ்சி மண்ணுக்கு தருகிறது.

🌱 சணப்பு பயிரின் தழைகள் நிலத்தில் மக்கி மண்ணிக்கு தேவையான கனிம, கரிமச் சத்துக்கள், மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.

🌱 சணப்பு பயிர் ஊடுப்பயிராக தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படுகிறது.

🌱 தென்னந்தோப்புகளில் மண் அரிப்பும், களை தொல்லையும், வறட்சியில் நீர் தேவையும் மிகவும் அதிகரிக்கிறது. இதனால் மகசு+ல் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. இக்குறைகளை போக்க தென்னந்தோப்பில் ஊடுபயிராக சணப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

🌱 சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி, மேல் மண் அரிப்பு தடுக்கப்படும்.

🌱 சணப்பு விதைகள் எண்ணெய் வித்தாக பயன்படுகிறது. இதன் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுகிறது.

🌱 சணப்பு பயிரை அதன் நாருக்காகவும் பயிரிடலாம். இதன் நார்கள் கயிறு செய்ய பயன்படுகிறது.

🌱 சணப்பு வளர நீர், உரங்கள் தேவையில்லை. மேலும் பூச்சித் தாக்குதலும் இல்லை.

🌱 நிலத்தின் வளத்தை அதிகரிக்க சணப்பை விதைத்து பயன் பெறலாம்.

நன்றி.
நித்ரா விவசாயம்.