மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு

jasmine

மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு:

இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது.
மல்லிகை சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம்.
1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம்.
2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம்.
3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது.
4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம்.
5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது.
6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை இயக்குவது நல்லது.
7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும்.
8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.
செடி நன்கு வளர்ச்சி அடைய மற்றும் அதிக பூக்கள் பூக்க செடிகள் அதிக வருடம் மகசுல் தருவதற்கு இயற்கை விவசாயம் செய்வோம்..
..ஒவ்வொரு தெளிப்புக்கும் (10நாள் இடைவெளி ).பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM ஜீவமிர்தம், பூச்சி விரட்டி தெளிப்புக்கு பயன்படுத்தவும்
ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM, ஜீவமிர்தம், சூடோமோனாஷ்…. இவையெல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்..
பூச்சி தாக்குதலுக்கு
அக்னி ஆஸ்திரம் or 18இலை மூலிகை பூச்சி விரட்டி,,, 10நாளுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்….
நாள் பட்ட நோய் தாக்குதல், நெமற்றோடு பிரட்சனை, வளர்ச்சி குறைவு, மஞ்சள் தன்மை,பூக்கள் குறைவு….இவையெல்லாம் படிப்படியாக விரைவில் குறைந்து நல்ல மகசூல் ஏற்படும்…..
அனைவருக்கும் நன்றி
திரு கொய்யா ஆறுமுகம் MA இயற்கை விவசாயி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி 9655950696

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *