மாடுகளுக்கான அடர் தீவனமுறை:
பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு…
இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்…
மாட்டுத் தீவனம் (அடர் தீவனம்)
(1000 கி – 1 ton அளவிற்கானது, உங்கள் தேவையை பொறுத்து கீழுள்ள சதவிகித முறையில்
கலந்து கொள்ளலாம்… அளவுகள் மிகத்துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு சில கிலோக்கள் கூடுதலாக இருக்கலாம், தவறில்லை…)
மாட்டிற்கு அடர் தீவனம்
கடலை புண்ணாக்கு: 23% (230 கி)
மக்காச்சோளம்: 15% (150 கி)
நெல்தவிடு: 20% (200 கி)
நாட்டுகம்பு: 10% (100 கி)
தேங்காய் புண்ணாக்கு: 10% (100 கி)
துவரம் பொட்டு: 10% (100 கி)
பொட்டு கடலை உதிரி: 10% (100 கி)
கல் உப்பு: 1% (10 கி)
நாட்டு சர்க்கரை: 1% (10 கி)
(புண்ணாக்குகள் மரச்செக்கு புண்ணாக்காக இருக்க வேண்டும், அதில் தான் எண்ணெய் சத்து மிகுதியாக இருக்கும்…)
மேலுள்ள தீவன முறையானது நல்ல பால் உற்பத்தியையும் மற்றும் மாட்டுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்…
ஆரம்பத்தில் மேலுள்ள அளவில் முதலில் நாட்டு கம்பிற்கு பதிலாக பருத்திக் கொட்டை சேர்த்திருந்தேன், பருத்திகொட்டை பொதுவாக பிடி ரகம் – மலட்டு பருத்திக் கொட்டையாக இருந்ததால் அது மாட்டிற்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும், அதன் பாலை பருகும் குழந்தைகள்/பெரியவர்கள் அனைவருக்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும் என்பதால் அதை தவிர்த்து நாட்டுக் கம்பு சேர்த்தேன்… அதேபோல் கோதுமை தவிடு இருந்தது, அது விலை மிக அதிகமாக இருந்ததால் அதை தவிர்த்து நெல் தவிடின் அளவைக் கூட்டிக் கொண்டேன்… இது போல உங்கள் தேவையை பொறுத்து சில மாற்றங்களையும் செய்து கொள்ளுங்கள்… நன்றி
நான் 2018 ல் கலந்த தீவன அளவின் ஒரு மாதிரியை செலவுடன் கீழே கொடுத்துள்ளேன்…
மாட்டு தீவனம் (அடர்) தேதி: 21.5.18
கடலை புண்ணாக்கு(25%)
250கி*36.5ரூ= 9125ரூ
(காஞ்சி கோவில்)
மக்காச்சோளம்(18%)
180கி*16ரூ= 2880ரூ
#அரைவு கூலி = 360ரூ
(பல்லகவுண்டன் பாளையம்)
நெல்தவிடு(20%)
200கி*7ரூ= 1200ரூ
(ஆலாம் பாளையம்)
நாட்டுகம்பு(10%)
100கி*19ரூ= 1900ரூ
#அரைவு கூலி = 360ரூ
(குன்னத்தூர்)
தேங்காய் புண்ணாக்கு (10%)
100கி*47ரூ= 4700ரூ
(குன்னத்தூர்)
துவரம் பொட்டு (12%)
120கி*18.33ரூ= 2200ரூ
(பெருந்துறை)
பொட்டு கடலை உதிரி மாவு(15%)
147கி*21.42ரூ= 3150ரூ
(ஈரோடு அருகில்)
கல் உப்பு(1%)
10கி*6ரூ= 60ரூ
நாட்டு சர்க்கரை(1%)
10கி*58ரூ= 580ரூ
மொத்த கலவை (112%)
1115கி = 26515ரூ
கலப்பு கூலி= 600ரூ
ஆட்டோ வாடகை = 1400ரூ
மொத்தம் = 28515 ரூபாய்
(1115 கிலோ தயாரிக்க ஆன செலவு)
(ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடங்களில் வாங்கப்பட்டது, என்பதால்… நீங்கள் உங்களின் அருகில் விலை குறைவாக கிடைக்கும் இயற்கையான தீவனப் பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளுங்கள்…
மற்ற தீவனங்களை விட இந்த முறையில் தீவனம் தயாரித்தால், குறைந்த தீவனத்தை மாடுகளுக்கு தந்தாலே பால் உற்பத்தி நன்றாக இருக்கும்…)
#அனுபவ பகிர்வு
நன்றி
ஏர்வளம் திவாகர் பழனிச்சாமி
திருப்பூர்
இயற்கை வேளாண்மை செய்வோம்…!
இயற்கை விளை பொருட்களையே வாங்குவோம்…!
இயற்கை ஆரோக்கியத்தோடு வாழ்வோம்…!
நல்ல முயற்சி பயனுள்ளதாக இருக்கு
Thank you sir. Keep reading.