மாடு மற்றும்ஆடுகளுக்கு மசால்உருண்டை தயார் செய்தல்
செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும்.
மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
சீரகம் 50 கிராம் – 10 நிமிடம் ஊறவைத்து அரைக்கலாம்
மிளகு 10 கிராம் – 10 நிமிடம் ஊறவைத்து அரைக்கலாம்
தேங்காய் அரை மூடி
வெற்றிலை 2
ஆடாதோடை இலை 2
மஞ்சணத்தி இலை 2( நுனா)
ஓமவள்ளி இலை ஒரு கைபிடி அளவு
துளசி இலை ஒரு கைபிடிஅளவு
சித்தரத்தை சிறிய துண்டு
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை 50 கிராம்
மஞ்சள் தூள் 25 கிராம்( மஞ்சள் கிழங்கு)
செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும்; உரல் அல்லது மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து
சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
கால்நடைகளுக்கு
மாடுகளுக்கு ஒரு கைபிடியளவு உருண்டையும் ஆடுகளுக்கு கோழிக் குண்டுஅளவு உருண்டைகளும் கொடுக்க வேண்டும்.
கொடுக்கும் முறை
மாடுகளுக்கு அல்லது ஆடுகளுக்கு கொடுக்கும் பொழுது அவற்றின் நாக்கு பகுதியில் தடவிகொண்டே நாக்கை பிடித்துக் கொண்டு கடவாய் பகுதியில் உருண்டையை கொடுக்க வேண்டும் ஒரு நாட்களுக்கு இரண்டு முறை ஒரு மாத இடைவெளில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
பயன்கள்
கால்நடைகளுக்கு கொடுக்கும் பொழுது நன்றாக செரிமான சக்தியை கொடுக்கும்
கால்நடை சுறுசுறுப்பாக காணப்படும்
சளி இருக்காது
சாணம் கெட்டியாக போடும் – (களிச்சல் இருந்தால் பால் குறையும்)
கால்நடை பளபளப்பாக இருக்கும்
உண்ணி இருக்காது
தீவனம், தண்ணீர் நன்றாக எடுக்கும்.