மிளகாய் சாகுபடி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க

முரணை

தினம் ஒரு தொழில்நுட்பம்

மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது நீக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்

1. மிளகாய் நாற்றுக்கள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வரப்பினை சுற்றி 5 அடிக்கு ஒரு ஆமணக்கு விதைகளை நட்டு வைக்கலாம் அந்த ஆமணக்கு விதைகளின் இடையே 10 சென்டிமீட்டர் ஒரு தட்டைப்பயிறு விதையை நட்டு வைப்பது நல்லது. இதனால் நம் பயிரைத் தாக்கும் 25% பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

2. பயிர் நட்டவுடன் மஞ்சள் நிற ஒட்டும் அட்டை 16 எண்கள் நீல நிற ஒட்டும் அட்டை 4 எண்கள் என்ற அளவில் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் ஆங்காங்கு நட்டு வைக்கலாம். அல்லது சூரிய ஒளியில் இயங்கும் விளக்கு பொறியை ஒரு ஏக்கருக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் மாலை ஆறு மணியிலிருந்து 9 மணி வரை எரியுமாறு வைக்கலாம். இதன் மூலம் 25 % பூச்சி தாக்கத்தை குறைக்கலாம்.

3. மேலும் வேப்பெண்ணை கரைசல், ஐந்திலை கசாயம், 10 இலை கசாய,ம் அக்னி அஸ்திரம், கற்பூர கரைசல், வெள்ளை வேள மரப்பட்டை கரைசல் போன்ற இயற்கை வழி திரவங்களை நான்கு நாட்கள் முதல் 6 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மாலை வேலையில் அதன் அளவில் தெளிக்கலாம். அல்லது வெர்ட்டி சீலியம் லக்கானி என்ற உயிரியல் திரவத்தை 10 லிட்டருக்கு 75 மில்லி முதல் 100 மில்லி வரை கலந்து மாலை வேளையில் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். இதன் மூலம் மீதம் 50% பூச்சித் தாக்கத்தை முழுமையாக நிறுத்தலாம்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்.