முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) இயற்கை பூச்சிக்கொல்லி
வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்?
வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெயர்.
இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
• முட்டைகள்
• எலுமிச்சைப்பழ சாறு
• வெல்லம்
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் 5 எலுமிச்சைப்பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.
இதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை, வைக்கவும். எலுமிச்சை சாற்றில் முட்டைகள் முழுவதும் மூழ்கியிருக்க வேண்டும்.
பாத்திரத்தின் மேல்புறத்தை காற்று உட்புகாதவாறு மூடி 10 நாட்கள் அப்படியே வைக்கவும்.
10 நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்துக் கரைசலை உருவாக்க வேண்டும். இந்தக் கலவைக்கு நிகராக வெல்லப்பாகைச் சேர்த்து 10 நாட்கள் அப்படியே வைக்கவும்.
5 எலுமிச்சைப்பழக்கசாற்றுக்கு 50 கிராம் வெல்லம் என்ற அளவைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதன் பிறகு உருவாகும் முட்டை அமினோ அமிலத்தை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பூச்சிக்கொல்லியாகத் தெளிக்கலாம்.
பயன்கள்
இந்த கரைசலில், மீனின் சாற்றில் உள்ளதற்கு இணையான, தாவரத்தின் வளர்ச்சியைத் தூண்டும் அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவே இந்த கரைசலின் முக்கியப் பயனாகும்.
எப்படிப் பயன்படுத்துவது?
இந்தக் கரைசலில் இருந்து 2 மில்லிகிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறைத் தெளிப்பது நல்ல பலனைத் தரும்.
Brittoraj