முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது

Agriwiki.in- Learn Share Collaborate
பறவை பாலா

அண்ணா நான் ரகு பேசுறேன்.

சொல்லு தம்பி என்ன விஷயம்?

அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது?

எதுக்கு முல்லைவனம் வரப்போறே?

அண்ணா நான் கொஞ்ச நாளைக்கு முன்னால பயிற்சிக்கு வர்ரேன்னு சொல்லி பேசியிருந்தேன்லணா! அந்த ரகு பேசுறேன் மறந்துட்டீங்களா?

இல்லம்மா ஞாபகமிருக்கு. அதனாலதான் கேட்குறேன் நீ எதுக்கு முல்லைவனம் வரப்போறேன்னு?

அண்ணா சாரிண்ணா. வீட்ல பெரியப்பாவுக்கு உடம்புக்கு முடில அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சி சாரி.

நான் உன்னிய என்னைக்கு வரச்சொன்னா நீ என்னைக்கி வர? அதான் தாமதமாகுதுன்னு தெரியுதுல்ல. ஒரு போன் பன்னி சொல்றதுல உனக்கென்ன பிரச்சனை?

சாரிண்ணா இந்த ஒரு தடவை மட்டும்.

சரி அப்போ நீ ஒன்னு பன்னு. அங்கே திருச்சி பஸ் நிக்குதா?

ஆமாண்ணா.

அதுல அப்படியே ஏறி வீட்டுக்கே போயிடு சரியா.

அய்யோ அண்ணா.

என்ன நொண்ணா? என்னடா படிச்சிருக்கே?

மெக்கானிக்கல் இஞ்சினியரிங்.

மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிச்சிட்டு ஏன்டா மாடு மேய்க்க வர்ரே?

அது எனக்கு பிடிக்கலைண்ணா.

கல்லூரிக்கு பணம் கட்டி உன்னைய படிக்க வச்சவன் லூசுப்பய. நீ மட்டும் புத்திசாலி என்னடா?

….

ஏன்டா கல்லூரிக்கு பணம் கட்டி படிப்பே. காலதாமதமாகாமல் கீழ்படிதலுடன் நடந்து கொள்வே. ஆனா இந்த இயற்கை வாழ்வியல் கற்றுத்தேறனும்னா மட்டும் உன் சௌரியத்துக்கு வருவே. சௌரியத்துக்குப்போவே. நாங்க இவன் எப்படா வருவான்னு கதவைத்திறந்து காத்திட்ருக்கனும் அதானே!?

இல்லண்ணா வேலையாயிருந்துட்டேன்.

இப்போ நீ என்ன சொல்ல வர்ர? நீ மட்டும் வேலையாயிருந்த. நாங்க வேற வேலையேயில்லாம இந்த வேலை பாத்துட்டலையுறோம் அதானே சொல்ல வர்ர?

உனக்கொன்னு தெரியுமா? இந்த இரசாயன உரங்களுக்குப்பதிலா விளை நிலத்தில் பயன்படுத்த இயற்கை உரமொன்று கண்டுபிடிச்சிருக்காங்களாம் அதற்குப்பெயர் பஞ்சகவ்யாவாம். அது திரவ வடிவிலிருக்கிறதாம்ன்னு கேள்விப்பட்டு அதைக்கற்றுக்கொள்ள வேண்டுமென்கிற ஆர்வத்துல நீண்ட நாட்கள் பசியோடு காத்திருக்கும் ஒரு வேட்டை நாயைப்போல ஒருநாள் முழுக்க பசியோடு இரும்புக்கேட்டை பிடித்துக்கொண்டே நின்றேன் ஒரு பண்ணையில். இறுதிவரை அந்த கேட் திறக்கவேயில்லை.

பிறகுதான் தெரிந்தது அது ஒரு பயிற்சித்தளமென்றும், கட்டணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டுமென்பது அதன் விதிமுறையென்று.

அன்றைக்கு முடிவெடுத்தேன். யாரோட தொழில்நுட்பத்தை யார், யாருக்கு பணம் பெற்றுக்கொண்டு கடத்துவது. இதென்ன அநியாயம்?

பிறகு நானாக தொடர்ந்து பயணித்து தேடித்தேடி கற்றுக்கொண்டேன். பின்னாட்களில் வலசைப்பாதையென்று நான் அமைப்பாக விரிந்த போது இதே போல் எந்தத்தம்பியும் கையறு நிலையில் நின்றுவிடக்கூடாதென்றுதான் எப்போதும் முல்லைவனக்கதவுகளை திறந்தே வைத்திருக்கிறேன்.

ஆனாலும் ரொம்ப பன்றீங்கடா. நீ எதுவும் தெரியாம வருவே. உனக்கு சமைக்கச்சொல்லிக்குடுத்து, நீச்சல் தெரிலைன்னா நீச்சல்சொல்லிக்குடுத்து, முன்னெத்தி ஏர்களின் நூல்களை வாசிக்கச்சொல்லிக்குடுத்து, உடலை வலுப்படுத்த உடற்பயிற்சி சொல்லிக்குடுத்து, அப்புறம் களப்பயிற்சி குடுத்து, சொந்தமா இடமிருந்தா அதை சீர்செய்கிற வரைக்கும் அருகிலிருந்து, அதுவும் வழியில்லைன்னா ஏதாவதொரு தோட்டத்திலே வேலைக்கமர்த்தி உங்கள தாங்கு தாங்குன்னு தாங்குறேன்ல நீ இதுவும் பன்னுவே இதுக்கு மேலேயும் பன்னுவே.

அண்ணா சாரிண்ணா.

சாரி எங்கிட்டே ஏன்டா கேட்குற. நீ போய்ட்டு நேர்முகத்தேர்வு முறைப்படி அறிவிக்கும்போது வா. அப்படின்னாதான் உனக்கெல்லாம் புத்தி வரும்.

இப்போ ஏற்கெனவே இயற்கைவழி வாழ்வியலை மேற்கொள்கிறவனுக்கு பொண்ணு தர பயப்படுறாங்க தெரியுமில்ல. மாதம் வெறும் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும்கூட பரவாயில்ல. ஆனா அவன் நகரத்தில் வாழ்பவனா இருக்கனும். இந்த விவசாயப்பயலுகள கட்டிக்கிட்டா ஆத்தாடி அவ்ளோதான். இவன் வயிறு கிழிச்சி குழந்தைய எடுக்க சம்மதிக்க மாட்டேன், இயற்கைவழி பிரசவம்பான். அதுவும் இவ்ளோ நாகரீகம் வளந்த காலத்துல பிறப்புறுப்பின் பாதை வழியா குழந்தையா? பன்னி கைஸ்.

நீ மேற்கொள்ளப்போகிற வாழ்க்கையை நீயே மதிக்கலைன்னா அப்புறம் யாரு மதிப்பாடா?

#வலசைப்பாதை#தற்சார்புவாழ்வியல்#ரகு#பறவைஅண்ணா நான் ரகு பேசுறேன்.சொல்லு தம்பி என்ன விஷயம்?அண்ணா நான் இப்போ மதுரை…

Posted by பறவை பாலா on Monday, June 3, 2019