வாழை பற்றிய சில தகவல்கள்

வாழை பற்றிய சில தகவல்கள்
Agriwiki.in- Learn Share Collaborate
வாழை பற்றிய சில தகவல்கள்.

வாழை பயிர் விவசாயியின் வாழ்வை வளமாகும் ஒரு பயிர். வருட பயிர் என்பதால் நம்முடைய முதலீடு சற்று கூடுதலாக தெரியும். இருப்பினும் ஊடுபயிர் செய்து செலவீனங்களை குறைத்து கொள்ளலாம்.

வாழைக்கு ஏற்ற காலம்

வாழைக்கு புரட்டாசி முதல் தை மாதம் வரை பயிர் செய்ய ஏற்ற காலம் இதில் இடையே உள்ள 3 மாதங்கள் மிக உகந்த காலம் என்று சொல்லலாம்.

நிலம் தயார் செய்தல்.

சித்திரை கோடை மழையின் போது பலதானியங்கள் விதைத்து உழுது விட்டால் ஆனி மாதம்  அவற்றை மடக்கி உழுது விட்டு அந்த வயலுக்கு(1ஏக்கர்) 10 டன் தொழு உரத்தை அங்கங்கே கொட்டி வைத்து விட வேண்டும்.

ஒரு மாதம் கழித்து அதாவது ஆடி மாதம் இறுதியில் அந்த தொழு உரத்தை வீசிவிட்டு நன்கு 2 முறை உழுது விட வேண்டும்.

ஒரு டன் தொழு உரத்தை மரத்தின் நிழலில் இட்டு அதில் விரிடி 2லிட், சுடோமோனாஸ் 2லிட், வாம் 2kg, போகார்னியா 2kg , பாஸ்போ பாக்டீரியா 3 லிட், அசோஸ்பைரில்லம் 2 லிர், பொட்டாஷ் பாக்டீரியா 1 லிட், ஜிங்க் மொபைலிஸர் 1 லிட், சிலிகா மொபைலிசர் 1 லிட் என்ற அளவில் கலந்து 5 கிலோ வெல்லத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து வெய்யில் படாமலும் கோழிகள் கிளைத்துவிடாமலும் மூடி வைத்து விட வேண்டும். ஐப்பசி மாதம் தொடக்கம் முதல் பயிர் செய்ய தொடங்கலாம்

விதை தேர்வு

ஆரம்ப நிலை முதலீடு இயன்றவர்கள் திசு வாழை செல்வது சிறந்தது. மற்றபடி நோய் தாக்கம் இல்லாத தாய் கிழங்கில் இருந்து வந்த ஒரு தரமான பக்க கன்றுகளை தேர்வு செய்து அவற்றை எடுத்து விரிடி மற்றும் சுடோமோனாஸ் இல் விதைநேர்தி செய்து விட வேண்டும்.

வாழையில் ரகத்தை பொறுத்து குழிகள் இடைவெளி விட்டு எடுக்கவேண்டும். எடுக்கப்படும் குழி 1×1×1என்ற அளவிலாவது இருத்தல் நலம்.

அப்படி எடுக்கப்பட்ட குழியில் 1 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரத்தை இட்டு அதன் மீது கன்று நடவு செய்து கன்றுக்கு தேவையான அளவு மண்ணிட்டு மீதம் உள்ள குழியை நிரப்பாமல்  சற்று பள்ளமாகவே விட்டு வைக்க வேண்டும்.

அதன்மீது 100கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 gms ஆமணக்கு புண்ணாக்கு, 100 gms புங்கன் புண்ணாக்கு கலவை 300 gms கொடுத்து, பின்னர் பாசனம் செய்ய வேண்டும்.

பாசன முறை.

மணல் மற்றும் சரளை கலந்த பூமிக்கு 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறையும்

கருமண்  மற்றும் களிமண் பூமிக்கு 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை என பாசனம் செய்யலாம்.

ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகஃவ்யா அல்லது அல்லது ஜீவாமிர்தம் அல்லது அமிர்த கரைசல் அல்லது இ. எம் என்ற ஏதோ ஒன்றை ஒவ்வொரு பாசனத்திலும் கலந்து செலுத்தி வர வேண்டியது அவசியம்.

30 ஆம் நாள்

நடவு செய்த 30 ஆம் நாள் உயிர் இழந்த கன்றுகளை அகற்றிவிட்டு புதிய கன்றுகளை நடவு செய்து விட வேண்டும்.  நாடும் போது புண்ணாக்கு கலவை மிக அவசியம்.

30ஆம் நாள் 200 கிலோ தொழு உரத்துடன் 2 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா, 1 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா, 2 லிட்டர் அசோசபிரில்லாம் 1 லிட்டர் ஜிங்க் மற்றும் 1 லிட்டர் சிலிகா பாக்டீரியா கலந்து மாலை வேளையில் தூவிட்டு உடனே பாசனம் செய்துவிட வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் என்றால் ஒவ்வொரு பாசனத்திலும் ஒன்றாக கலந்து பாசனத்தில் விடலாம்.

60 ஆம் நாள்

60 ஆம் நாள் 200 கிலோ தொழு உரத்துடன் 2 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா, 1 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா, 2 லிட்டர் அசோசபிரில்லாம் 1 லிட்டர் ஜிங்க் மற்றும் 1 லிட்டர் சிலிகா பாக்டீரியா கலந்து மாலை வேளையில் தூவிட்டு உடனே பாசனம் செய்துவிட வேண்டும் சொட்டு நீர் பாசனம் என்றால் ஒவ்வொரு பாசனத்திலும் ஒன்றாக கலந்து பாசனத்தில் விடலாம்.

இத்துடன் பாஸ்போ பாக்டீரியா வை நாம் நிறுத்தி கொள்ளலாம். காரணம் பயிர் இதற்கு பிறகு மணிச்சத்தை எடுத்து கொள்ளாது.

90 ஆம் நாள்

90 ஆம் நாள் 2 டன் தொழுவுரத்தில் விரிடி 2 லிட் , சுடோமோனாஸ் 2 லிட், 1 லிட்டர் அசோசபிரில்லாம், 2 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா, 2 கிலோ போகார்னியா, 3 கிலோ மேட்டரைசியம் ஆகிய நுண்ணுயிரிகளை கலந்து மஞ்சில் தூவி களை எடுத்து பார் அணைக்க வேண்டும். பார் அகலம் சற்று கூடுதலாகவும் உயரம் சற்று குறைவாகவும் இருத்தல் நலம்.

இது தண்டு துளைப்பான் வரும் காலம் என்பதால் மேட்டரைசியம் பயன்படுத்துவது அவசியம். காய்ந்த சருகுகள் மற்றும் பக்க கன்றுகளை இனி வரும் காலங்களில் அகற்றி வருவது அவசியமான ஒன்று.

120 ஆம் நாள்

90 ஆம் நாள் முதல் 120 ஆம் நாட்களுக்குள் விரிடி 2 லிட், சுடோமோனாஸ் 2 லிட், 2 லிட்டர் பொட்டாஷ், 1 லிட்டர் ஜிங்க் மற்றும் 1 லிட்டர் சிலிகா பாக்டீரியா பாசனத்தில் கலந்து விட்டிருக்கவேண்டும்.

150 ஆம் நாள்

இது முக்கியமான காலகட்டம்.
இந்த சமயம் கோடை காலம்.
வெய்யில் தாகம் அதிகமாக இருக்கும்
அதனால் பாசனத்தில் குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
மேலும் 120முதல் 150 ஆம் நாட்களுக்குள் காற்று வீச கூடும். அதனால் நாம் கிழங்கு பகுதியில் இப்போது சற்று கூடுதலாக மண் அனைத்து கொள்வது நல்லது.இந்த தருணத்திலும் 2 லிட்டர் பொட்டாஷ், 1 லிட்டர் ஜிங்க் மற்றும் 1 லிட்டர் சிலிகா பாக்டீரியா பாசனத்தில் கலந்து விட்டிருக்கவேண்டும். அப்போதுதான் 180 நாட்கள் முதல் தார் ஈன ஆரம்பிக்கும்போது காய்கள் நிறைந்து காணப்படும்.

180முதல் 250 ஆம் நாட்களுக்குள்

அனைத்து கட்டைகளும் தார் இன்று விடும் இந்த தருணத்திலும் நாம் சுடோமோனாஸ் 2 லிட் spray 2 லிட்டர் பொட்டாஷ், 1 லிட்டர் ஜிங்க் மற்றும் 1 லிட்டர் சிலிகா பாக்டீரியா பாசனத்தில் கலந்து விட்டிருக்கவேண்டும். மேற்கண்ட அனைத்து நுண்ணுயிரிகளுக்கான மொத்த கணக்குகள் இதோ

Metarisium 3 lit Rs. 450.00
Viridi 4 lit. Rs. 600.00
Sudomonas 6 lit Rs. 900.00
Vam 2 kgs. Rs. 120.00
Pokarnia 2 kgs. Rs. 300.00
Paspo Bact. 9 ltrs rs. 1080.00
Potash bact. 15 ltrs. Rs. 1800.00
Zinc Mob. 6 ltrs Rs. 720.00
Silica mob 6 ltrs Rs. 720.00
Asospirilum 5 ltrs. Rs. 600.00
E.M. 1 ltr. Rs. 500.00

Total rs. 7790.00
இந்த செலவு வெறும் 10 மூட்டை பொட்டாஷ் உக்கு உண்டான செலவு மட்டுமே.

அசோக்குமார் கர்கூடல்பட்டி