வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க
Agriwiki.in- Learn Share Collaborate
வீட்டினுள் வெப்பத்தை குறைக்க

வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு.

வாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை.

வீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும்.இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது.

மற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது.

பெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும்.

மேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தொடரும்….
உங்கள் ஆதரவுடன் நான் ஹரி