அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்
Agriwiki.in- Learn Share Collaborate

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்
மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. மகசூல் அதிகரிக்க தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்) இடலாம்.

தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்)  – (Nitrogen Fixing Bacteria)

மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதாலும் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. அதனால் விவசாயதத்தில் மகசூல் குறைந்துள்ளது. மீண்டும் விவசாயத்தை நல்ல முறையில் கொண்டுவர விவசாயிகள் நுண்ணுயிர் இட வேண்டும்.

அசோஸ்பைரில்லம்

இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது. இது விதை நேர்த்தி செய்ய பயன்படுகிறது இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு 20 சதம் முதல் 40 சதம் வரை கொடுக்கிறது. அனைத்துவகை பயிர்களுக்கும் தழைச்சத்தை தரக்கூடிய இயற்கை உரமாக பயன்படுகிறது. எல்லாவகை பயிர்களுக்கும் உபயோகப்படுத்தலாம்.

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்

மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது, இரசாயன உரத்தின் அளவை குறைக்கிறது.
மகசூல் கூடுகிறது, செலவு குறைவு.
விதை முளைப்புத்திறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவுக்கு வறட்சியைத் தாங்கும் தன்மையையும் அளிக்கிறது.

பயன்படுத்தும் முறை

 

விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு, அசோஸ்பைரில்லம் 200கிராம், 250 மில்லி ஆரிய அரிசி வடிகஞ்சியுடன் கலந்து பின் விதையை நிழலில் உலர்த்தி பிறகு நடலாம்.

 

நாற்று நேர்த்தி
400 கிராம் உயிர் உரத்தை 10 -20 லிட்டர் நீரில் கலந்து நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடவும்.

 

அடியுரமாக

(உயிர் உரம்)அசோஸ்பைரில்லம் 2 கிலோ 50 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவிடவும்.

 மேலும் உயிர் உரங்களின் பயன்கள் பற்றி அறிய 

 

தகவல்: RSGA, MSSRF , கன்னிவாடி