அமிர்தகரைசல்

Agriwiki.in- Learn Share Collaborate

அமிர்தகரைசல்

அமிர்தகரைசல் தேவையான பொருட்கள்

🍯 நாட்டுப்பசு சாணம் – 10 கிலோ

🍯 நாட்டுப்பசு கோமையம் – 10 லிட்டர்

🍯 கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் – 250 கிராம்

🍯 தண்ணீர் – 200 லிட்டர்

தயாரிக்கும் முறை

🍯 முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசு சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

🍯 அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

🍯 இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும்.

🍯 ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

நன்மைகள்

🍯 இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும்.

🍯 பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும்.

🍯 பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம்.

🍯 தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.