ஆமணக்கு பயிரிட செலவு குறைவு

Agriwiki.in- Learn Share Collaborate

ஆமணக்கு பயிரிட செலவு குறைவு

நிறைய நட்புகள் ஆமணக்கு பயிரிட விரும்புகிறார்கள் என தெரிகிறது.
இதற்கு செலவு குறைவு.
கொஞ்சம் திட்டமிட்டு நடவு செய்தால் களையெடுப்புக்கான ஆட்கூலியை குறைக்க முடியும்.
பவர் டில்லர் கொண்டு எளிதாக களை உழவு செய்து பார் அமைக்க முடியும்.

எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.

ஆமணக்கு இரகம்

பத்து வருடங்களுக்கு மேல் நல்ல நிலையில் தமிழ்நாட்டில் Gch4 பயிர் செய்யப் படுகிறது. நோய் தாக்கம் மிக குறைவு. சுமார் 1000கிலோ அளவுக்கு ஒரு ஏக்கரில் மகசூல் கிடைக்கும்.

நீர் வசதி இருக்குமானால் 1200 கிலோ அளவுக்கு மகசூல் எடுக்க முடியும் என கூறுகிறார்கள்.

பயிர் செய்யும் முறை

சரி இனி பயிர் செய்யும் முறையை பார்ப்போம்.
பொதுவாக 6’×6′ என நடவு செய்கிறார்கள்.
வரிசைக்கு வரிசை 6′
செடிக்கு செடி 6′

இதில் சிறிது மாற்றம் செய்து
வரிசைக்கு வரிசை 6′
செடிக்கு செடி 3′
என நடவு செய்கிறேன்.

முதல் குலை நீளமாக வரும். அதுவரை நிழல் அதிகம் இருக்காது. 60 நாளில் முதல் குலை தோன்றும். 100 நாளில் அறுவடைக்கு வந்து விடும்.
அதற்கு பின் தான் மற்ற குலைகள் பலனுக்கு வரும். முதல் குலை சுமார்
2 1/2′ நீளம் வரும்.
முதல் குலையை அறுவடை செய்து கொண்டு ஒரு செடி விட்டு ஒரு செடியை எடுத்து விடலாம். இது மகசூலை கூட்டும்.

நடவு

இப்போது நடவில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

வரிசைகள் கிழக்கு மேற்காக அமைப்பது சூரிய ஒளி நாள் முழுவதும் செடிகளுக்கு கிடைக்க வழி வகுக்கும்.
அடுத்து வரப்போரம் முதல் செடியும் அடுத்து 5′ தள்ளி நடவு செய்யுங்கள். களை உழவு செய்யும் போது வண்டி திரும்ப வசதியாக இருக்கும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய முடிந்தால் சிறப்பு.

இத்துடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துகளுக்கு ஏற்ப பின்னூட்டத்தில் விளக்கம் பார்ப்போம்.
வாழ்த்துகள்.