இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த

Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த வேண்டுமா?

எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை !!

🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி.ஆர்.ஐ-6,7,8, ஐ.சி.ஜி.வி-350 மற்றும் டி.எம்.வி 13 ஆகிய ரகங்களும், எள்ளில் டி.எம்.வி 7, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ-1,2 ஆகிய ரகங்களும், சூரியகாந்தியில் டி.என்.ஏ.யு, எஸ்.எப்.எச்.ஒய் 2, கோ-5 ஆகிய ரகங்களும் உள்ளன.

🌿 ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராமும், ஒரு ஹெக்டேர் விதைக்கு ரைசோபியம் 600 கிராமும் கலந்து, விதை நேர்த்தி செய்து 30 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும்.

🌿 விதைக்கும் போது ஒரு மீட்டருக்கு 33 பயிர்கள் இருக்கும்படி பராமரிப்பு செய்ய வேண்டும்.

🌿 மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும்.

🌿 ஒரு ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோவும், மணிச்சத்து 50 கிலோவும், சாம்பல் சத்து 75 கிலோவும் இட வேண்டும்.

🌿 தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை 3 பிரிவுகளாக பிரித்து அடியுரமாக 50 சதவீதமும், விதைத்த 20-வது நாளில் 25 சதவீதமும் மற்றும் விதைத்த 45-வது நாளில் 25 சதவீதமும் அளிக்க வேண்டும்.
மூடாக்கின் சிறப்புகள் !!

🌱 மழைக்காலத்தில் நீரை சேமிக்கும்.

🌱 மூடாக்கே சிறிது நாளில் மக்கி மண்ணிற்கு உரமாக பயன்படுகிறது.

🌱 இதனால் நன்மை செய்யும் மண்புழு, கரையான் மற்றும் நுண்ணுயிரிகள் பெருக்கமடைகின்றன.

🌱 மேலும் வெயில் காலத்தில் நீர் ஆவியாவதை தடுக்கும். களைகள் உருவாவதில்லை.

🌱 மண்ணை கோதிவிடுதல், பார் அமைத்தல் போன்ற வேலைப்பாடுகளை தவிர்க்க முடியும்.
களைகளை கட்டுப்படுத்த,,,,,

🍃 களையை கட்டுப்படுத்த மாடுகளின் சிறுநீரே போதுமானது.

🍃 களை சிறியதாக இருக்கும்போது ஸ்பிரேயர் கொண்டு பயிர்களின் மீது படாமல் களைகள் மீது தெளிக்கலாம். தெளிக்கும் மாட்டுக்கோமியத்தில் தண்ணீர் சிறிதளவு கூட கலக்கக்கூடாது.

🍃 தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஒரு டேங்கிற்கு அரை பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

🍃 ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட தெளிக்கலாம்.

🍃 மேலும் இது பயிர்களுக்கு ஊட்டமேற்றிய உரமாகி, மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்க செய்யும்.